உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 235 - பெரிய புராண விளக்கம்-20

வரை-பெருமையைப் பெற்று விளங்கும் வெள்ளிமலையாகிய கயிலாய மலை. என்ன-என்று கூறுமாறு விளங்குவதும்; வினையாலணையும் பெயர். த், சந்தி. திருத்தோணி-சீகாழி யில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டு மலையின் மேல் விளங்கும் அழகிய தோணியில். வீற்றிருந்தஅமர்ந்திருந்தவரும் ஆகிய வினையாலணையும் பெயர். புள்ளி-புள்ளிகளைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். மான் உரியாரை-மான்தோலை உடுத்தவராகிய தோணி யப்பரை. த்:சந்தி. தொழுது-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வணங்கி விட்டு. அருளால்-அந்தத் தோணியப்பர் வழங்கிய திருவருளோடு, உருபு மயக்கம். புறப்பட்டார்-சீகாழியை விட்டுப் புறப்பட்டு அப்பால் எழுந்தருளினார்.

பிறகு வரும் 144-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: வெங்குருவாகிய சீகாழியை ஆட்சி புரிந்தருளும் அரச ராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கேடு இல்லாத புகழைப் பெற்ற திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனாரோடும் தம்முடைய தந்தையாராகிய சிவபாத இருதயரோடும் தம்மோடு சேர்ந்து வந்த சீர்த்தியைப் பெற்ற நடராஜப் பெருமானாருடைய அடியவர்கள் தம்முடைய பக்கத்தில் வர தாமரை மலரின்மேல் வீற்றிருக் கும் பிரமதேவன் வாழ்த்தி வணங்கும் புகவியாகிய சீகாழி யைத் தாண்டி மேலே எழுந்தருளி எல்லாத் தேவர்களுக்கும் மேலாக விளங்கும் பெருமையைப் பெற்றுத் திகழும் மகா தேவராகிய நடராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அழகிய தில்லையாகிய சிதம்பரத்தின் வழியாக அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருள்பவரானார். பாடல் வருமாறு: " தாவில்யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும்

மேவியசீர் அடியார்கள் புடைவரவெங் குருவேந்தர் பூவின்மேல் அயன்போற்றும் புகலியினைக் கடந்துபோய்த் தேவர்கள்தம் பெருந்தேவர் திருத்தில்லை வழிச்

- செல்வார்.'