உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பெரிய புராண விளக்கம்-1).

நிலை. நிவந்த-மேலே உயர்ந்துள்ள. நீல-நீல நிறத்தைப் பெற்ற, நுண்-நுட்பமான துகில்-மெல்லிய ஆடையை. விதானித்தது போன்றது நெடுவானம்-மேற்கட்டியாகக் கட்டியதைப் போல உயரமான ஆகாயம் விளங்கியது.

பின்பு உள்ள 153-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'கரும்புச் செடிகளும், சம்பா நெற்பயிர்களும், பசுமை யாகிய பாக்கு மரங்களோடு சேர்ந்து உயரமாக வளர்ந்து நிற்கும் வயல்களைப் பெற்ற அழகிய பண்ணையை அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் விட்டு விட்டு எழுந் தருளி அரும்புகளும், மென்மையான மலர்களும், பல தளிர் களும் வேர்களும் என்ற எல்லாப் பொருள்களுக்கும் இருப்பிடமாக விளங்கும் பக்கத்தில் உள்ள நநதவனத்தை வணங்கிவிட்டு, மாடங்களும், திருமாளிகைகளும் உயரமாக நின்று ஒன்றனோடு ஒன்று நெருக்கமாக இருக்கும் தில்லை யாகிய சிதம்பரத்தைச் சுற்றியிருக்கும் உயரமாகிய திருமதிலுக்குத் தென் திசையில் உள்ள அழகிய திருக்கோயி லினுடைய வாசல் தமக்கு நேரில் சமீபத்தில் இருப்பதாக அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு:

' கரும்பு செங்கெல் பைங்கமுகொடு கலந்துயர். கழனியம் பனைநீங்கி - அரும்பு மென்மலர் தளிர் பல மூலமென்

றனைத்தின்ஆ கரமான மருங்கில் கந்தன வனம் பணிந் தணைந்தனர்

மாடமா ரிகை ஓங்கி நெருங்கு தில்லைசூழ் நெடுமதில் தென்திரு

வாயில்கே ரணித்தாக."

கரும்பு-கரும்புச் செடிகளும்; ஒருமை பன்மை மயக்கம். செந்நெல்-சம்பா நெற் பயிர்களும்; ஒருமை பன்மை மயக் கம். பைம்-பசுமையாக இருக்கும். கமுகொடு-பாக்கு மரங் களோடு: ஒருமை பன்மை மயக்கம். கலந்து-சேர்ந்து. உயர்உயரமாக வளர்ந்து நிற்கும். கழனி-வயல்களைப் பெற்ற8,