உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 265.”

நாயனார். கற்றாங்கெரியோம்பி எடுத்தார்-கற்றாங்க கெரியோம்பி" என்று தொடங்கி அந்த நாயனார் பாடி யருளினார்.

இந்தப் பாடலில் குறிப்பிட்ட கற்றாங்கெரியோம்பி என்று தொடங்கும் பாசுரத்தைச் சென்ற பாடலின் உரை யில் காட்டினோம்; ஆண்டுக் கண்டுணர்க. அந்தத் திரும்: பதிகத்தில் வரும் மற்றொரு பாசுரம் வருமாறு:

' செல்வ நெடுமாடம் செனறு சேணோங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே."

பின்பு வரும் 163-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் தோணியில் வீற்றிருக்கும் பெரிய நாயகியாரை நோக்கித் தமக்குச் சிவஞானம் உண்டாகும் நல்ல காலத்தைப் பெறுமாறு அழுதருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குறிஞ்சிப்பண் அமைந்த அந்தத் திருப்பதிகத்தினுடைய இறுதிப் பாடலின் பாசுரத்தில் தம்முடைய் திருநாமத்தை வைத்துப் பாடியருளிய திருக்கடைக் காப்பாகிய பாசுரத்தை யும் பாடியருளி நடராஜப் பெருமானாரை வாழ்த்தி வணங்கித் தம்முடைய திருமேனிக்குள் அமைந்திருக்கும். எலும்புகளையும் உயிரையும் கரையச் செய்து பக்தியினால் உருகுமாறு புரியும் தேவலோகத்தில் வாழும் தேவர்களி னுடைய தலைவனாகிய நடராஜப் பெருமான் புரிந்தருளிய திருநடனத்தை அந்த நாயனார் வெட்டவெளியில் தரிசித்து ஆனந்த சாகரத்தில் முழுகித் தம்முடைய கண்களில் நிறைந்து விளங்கும் அமுதத்தைப் போன்ற அந்த நடராஜப் பெருமானாரைத் தம்முடைய திருவுள்ளத்திற்குள் புகுமாறு ழுவிங்கினார். பாடல் வருமாறு: