உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 298 பெரிய புராண விளக்கம்-18

அங்கு-அந்த நீலகண்டேசுவரருடைய திருக்கோயிலில், இசை யுடன்-உரிய பண்னோடு. உரை செய்தார்-அந்த நாயனார் பாடியருளினார்.

தி ரு எ ரு க் க த் த ம் பு லி யூ ர் : இந்தச் சிவத் தலத்திற்கு இக்காலத்தில் வழங்கும் பெயர் இராஜேந்திரப் பட்டினம் என்பது, இது நடுநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் நீலகண்டேசுவரர். அம்பிகை நீலமலர்க்கண் அம்பிகை. தலவிருட்சம் வெள் ளெருக்கஞ்செடி. இது விருத்தாசலத்திற்குத் தெற்குத் திசையில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது. திருக்கோயிலுக்குள் வெள்ளெருக்கஞ்செடி ஒன்று உள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதி கங்களைத் தம்முடைய யாழில் வைத்து வாசித்த திருநீல கண்டத்து யாழ்ப்பெருபாண நாயனார் திருவவதாரம் செய்தருளிய தலம் இது. இதற்குக் கிழககுத் திசையில் நான்கு மைல் தூரத்தில் பூரீமுஷ்ணம் என்னும் திவ்யதேசம் உள்ளது. -

பின்பு வரும் 180-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'பழங்காலம் முதலாகப் புகழோடு விளங்கும் வெங்குரு வாகிய சீகாழியை ஆட்சி புரிந்தருளும் அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தத் திருஎருக்கத்தம்புலியூரி' லிருந்து எழுந்தருளி அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும் பாண நாயனாரோடு அழகிய தங்கம் தோன்றும் பெருமை யைப் பெற்று விளங்கும் இமயமலை அரசனுடைய புதல்வி யும் பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய பார்வதி தேவியைத் தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளுமாறு: செய்தவராகிய சிவபெருமானார் இனிதாகத் தங்கி எழுந் தருளியிருக்கும் நல்ல சிவததலங்கள் பலவற்றிற்கும் அந்த நாயனார் பக்தியோடும் எழுந்தருளி அந்தத் தலங்களில் திருக்கோயில கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் களை வணங்கித துதித்துவிட்டு துயதாக உள்ள சொற்.