உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 29&s

சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற: செந்தமிழ் மொழியில் அமைந்த கொடுத்த மாலையில் உள்ள மலராகிய ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி அப்பால் எழுந்தருளி சிவந்த கண்களைப் பெற்ற இடபவாகனத்தை. ஒட்டுகிறவராகிய பழமலைநாதர் திருக்கோயில் விளங்கும்: திருமுதுகுன்றாகிய விருத்தாசலத்துக்கு எழுந்தருளி விருத். தாசலேசுவரரை வணங்கி விட்டு அப்பால் எழுந்தருளி வேறு சிவத்தலங்களை அடைகிறவரானார். பாடல் வருமாறு:

அங்கு கின்றெழுந் தருளிமற் றவருடன்

அம்பொன்மா மலைவல்லி

பங்கர் தாம் இனி துறையும்கற் பதிபல புரிவொடும் பணிந்தேத்தித்

துங்க வண்டமிழ்த் தொடைமலர் பாடிப்போய்த்

தொல்லைவெங் குருவேந்தர்

செங்கண் ஏற்றவர் திருமுது குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.'

.ெ த ல் ன ல - பழங்காலம் முதலாகப் புகழோடு, விளங்கும். வெங்குரு-வெங்குருவாகிய சீ கா ழி ைய. வேந்தர்-ஆட்சி புரிந்தருளும் அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அங்கு நின்று-அந்தத் திருஎருக்கத்தம் புலியூரிலிருந்து. எழுந்தருளி-அப்பால் எழுந்தருளி. மற்று: அசைநிலை. அவருடன். அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனாரேர்டு. அ-அழகிய, பொன்-தங்கம் தோன்றும். மா-பெருமையைப் பெற்று விளங்கும். மலைஇமயமலை அரசனுடைய புதல்வியும்; திணை மயக்கம். வல்லி-பூங்கொடியைப் போன்றவளும் ஆகிய பார்வதி தேவியை உவம ஆகுபெயர். பங்கர்தாம்-வாம பாகத்தில் எழுந்தருளுமாறு செய்தவராகிய சிவபெருமானார். தாம்: அசைநிலை. இனிது-இனிமையோடு, உறையும்-தங்கி எழுந்: தருளியிருக்கும. நல-நலல. பதிபல-சிவத்தலங்கள் பல வற்றிற்கும். பதி:ஒருமை பன்மை மயக்கம். பரிவொடும்