உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 303

இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

  • " கருமணியைக் கனகத்தின் குன் றொப் பானைக்

கருதுவார்க் காற்ற எளியான் தன்னைக்

குருமணியைக் கோளரவம் ஆட்டு வானைக்

கொல்வேங்கை அதளானைக் கோவணவன்

தன்னை

அருமனியை அடைந்தவர்கட் கமுதொப் பானை

ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க

திருமணியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே."

பின்பு வரும் 181-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், 'மொய் கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்” என தம்மிடம் அடைந்த சொற்களாகிய மலர்களைக் கட்டிய மாலையாகிய சொற்கவை, பொருட் சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற ஒரு திருப்பதிகத்தை நட்டபாடைப் பண்ணோடும் அணிந்து பழமலைநாதரைத் துதித்து புரிகின்ற தவத்தைப் பெற்ற அழகிய முனிவர்களும், தேவர்களும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகள் எல்லாவற்றிலும் நெருக்கமாக இருந்து திருக் கோயிலுக்குள் நுழைந்து ஐயராகிய விருத்தாசலேசு வரருடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை வணங்கும் அந்தப் பழமலைக்கு பக்தியோடும் அந்த நாயனார் எழுந்தருளினார். பாடல் வருமாறு:

' மொய்கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ் - முதுகுன்றை அடைவோம்' என்

றெய்து சொன்மலர் மாலைவண் பதிகத்தை

இசையொடும் புனைந்தேத்திச்