உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 30莎

பாடு வாருக்கருளும் எந்தை பனிமுது பெளவ முந்நீர் நீடு பாரும் முழுதும் ஒடி அண்டர் நிலைகெடலும் நாடு தானும் ஊடும் ஒடி ஞாலமும் நான்முகனும் ஊடு காண மூடும் வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே."

அந்த நாயனார் மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு:

1. அறம்கிளரும் நால்வேதம் ஆவின் கீழ்

இருந்தருளி அமரர் வேண்ட

நிறம்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்

ஒன்றறுத்த நிமலர் கோயில்

திறம்கொள்மணித் திரளங்கள் வரத்திரண்டங்

கெழிற்குறவர் சிறுமி மார்கள்

முறங்களினாற் கொழித்து மணி செலவிலக்கி

முத்துலைப்பெய் முதுகுன்றமே.'

அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: +

முழவமர் பொழிலணி முதுகுன்றம் மேவிய

மழவிடை யதுவுடை பீரே மழவிடை யதுவுடை பீருமை வாழ்த்துவார் பழியொடு பகையிலர் தாமே."

பின்பு வரும் 182-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தேவர்களினுடைய தலைவராகிய பழமலைநாதரி. திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருமுது குன்றாகிய விருத்தாசலத்துக்கு எழுந்தருளி விருத்தாசலே சுவரரை வணங்குவதற்காகத் திருக்கோயிலை வலமாக வருபவராகி தூயதாகிய நறுமணம் கமழும் செந் தமிழ் மொழியில் அமைந்த சொற்கள் அடங்கிய திருவிருக்குக்குற

பெ-10-20