310 பெரிய புராண விளக்கம்-10 -
உள்ள இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவர்களாகிய வேதியர் கள் அந்த நான்கு வேதங்களையும் ஒதும் இனிய கானம் ஓங்கி எழும் அந்தப் பெண்ணாகடத்தில் விளங்கும் தூங்கானை மாடம் என்னும் திருக்கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக் கின்ற ஓர் ஒப்பற்ற பரஞ்சோதியாகிய சுடர்க்கொழுந்தீச ருடைய பக்கத்தை அந்த நாயனார் அடைந்து முன்னால் அந்த ஆலயத்தை வலமாக வந்து அந்தச் சுடர்க்கொழுந் தீசரை வணங்கி விட்டுத் தாம் புகழ்ந்து பாடியருளும் சொற்கள் அடங்கிய செந்தமிழ் மொழியில் அமைந்த மாலை யாகிய ஒரு திருப்பதிகத்தை, "தீங்கு நீங்குவீர் தொழு மின்கள்' என்று வரும் உரிய பண் அமைந்த ஒரு திருப்பதி கத்தையும் பாடி அறிவித்தருளினார். பாடல் வருமாறு:
' ஆங்கு நாதரைப் பணிந்துபெண் ணாகடம்
அனைந்தரு மறையோசை
ஓங்குதுங் கானைமா டத்துள் அமர்கின்ற
ஒருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு பணிவுற்றுப்
பரவுசொல் தமிழ்மாலை.
"தீங்கு நீங்குவீர் தொங்மின்கள்' எனும் இசைப்
பதிகமும் தெரிவித்தார்.'
ஆங்கு-அந்த விருத்தாசலத்தில் திருக்கோயில் கொண்டு. எழுந்தருளியிருக்கும். நாதரை-நாதராகிய பழமலைநாதரை, ப்:சந்தி. பணிந்து-திருஞான சம்பந்த மூர்த்தி நாயணான் வ ண ங் கி. பெண்ணாகடம்-திருப்பெண்ணாகடத்தை. அணைந்து-அடைந்து. அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு, அருமையாக உள்ள மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களை யும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவர் களாகிய வேதியர்கள்: திணை மயக்கம். மறை:ஒருமை பன்மை மயக்கம். ஒசை-அந்த நான்கு வேதங்களையும் ஒதும்