திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 31 o'
துறை-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருநெல்வாயில் அரைத்துறையை. நோக்கியே-பார்த்தே. காதலால்-விருப்பத்தோடு: உருபு மயக்கம். அனைவார்அடைபவராகி; முற்றெச்சம். கடிது-வேகமாக. ஏ.கிடம எழுந்தருள. த்: சந்தி. தாதையாரும்-தம்முடைய தந்தை. யாராகிய சிவபாத இருதயரும். பரிவு உற-வருத்தத்தை அடையுமாறு. ச்: சந்தி. சம்பந்தர்.திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பாத-தம்முடைய திருவடிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். தாமரை-செந்தாமரை மலர்கள்: ஒருமை பன்மை ம ய க் க ம். பைப் பய-கால்களால் நடந்தமையால் மெல்ல மெல்ல. நொந்தன.வருத்தத்தை அடைந்தன.
அடுத்து வரும் 138-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்கள் யாவும் ஒரு வடிவமாக வந்தன என்று கூறுமாறும், கலைகள் திரம்பிய பூரண சந்திரனாகிய குழந்தை நீளமாக உள்ள தரையைக் சேர்ந்திருக்கிறது என்று கூறுமாறும், துறையில் அலைகள் வீசும் கங்கையாற்றைத் தம்முடைய தலையின் மேல் தங்க வைத்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவரும், எங்கும் நிறைந்தவருமாகிய அரத்துறை நாதரை வணங்கும் பொருட்டு வேகத்தொடு அந்த நாயனார் எழுந்தருளினார். பாடல் வருமாறு:
மறைய னைத்தும் ஒருவடி வாமென கிறைம திப்பிள்ளை நீள்கிலம் சேர்ந்தெனத் துறைஅ லைக்கங்கை சூடும் அரத்துறை இறைவ ரைத்தொழு வான்விரைக் தேகினார்."
மறை-அந்த்த் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இரு க் கு வே த ம், யஜுர் வேதம், சாம வேதம்,