திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 3.25
மாகிய அரத்துறை நாதர். அருளுவார்-வழங்கியருளுப -8ицтп єкттт, -
பிறகு வரும் 196-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: நெடுங்காலமாகப் பக்தர்கள் வாழ்ந்து வரும் சிவத்தல மாகும் திருநெல்வாயில் அரத்துறையில் உள்ள மாடங்கள், பெருமையைப் பெற்று விளங்கும் திருமாளிகைகள் ஆகிய ஒவ்வொன்றிலும் வாழும் வேதியர்களுக்கு அவர்கள் துயில் கொள்ளும் போது அன்று வந்து சேரும் இரவு நேரத்தில் சொப்பனத்தில் கூட்டமாக உள்ள வேதங்கள் தேடுகின்ற செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடிகள் தோன்றுமாறு அந்த அரத்துறை நாதர் முன்னால் எழுந்தருளிப் பிறகு, பாடல் வருமாறு:
டுே வாழ்பதி யாகும்கெல் வாயிலின் மாட மாமனை தோறும் மறையோர்க்குக் கூடு கங்குல் கனவில் குலமறை தேடு சேவடி தோன்ற முன் சென்றுபின்.' இந்தப் பாடல் குளகம். நீடு-நெடுங்காலமாக. வாழ்பக்தர்கள் வாழ்ந்து வரும். பக்தர்கள்: தோன்றா எழுவாய். பதியாகும்-சிவத்தலமாகும். நெல்வாயிலின்-திருநெல்வாயில் அரத்துறையில் உள்ள மாட-மாடங்கள்: ஒருமை பன்மை மயக்கம். மா-பெருமையைப் பெற்று விளங்கும். மனைதிருமாளிகைகள்: ஒருமை பன்மை மயக்கம். தோறும்-ஆகிய ஒவ்வொன்றிலும் வாழும். மறையோர்க்கு-வேதியர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கூடு-அவர்கள் துயில் கொள்ளும் போது அன்று வந்து சேரும். கங்குல்இரவு நேரத்தில், கனவில்.அவர்கள் கண்ட சொப்பனத்தில். குல-கூட்டமாக உள்ள மறை-வேதங்கள்: ஒருமை பன்மை மயக்கம், தேடு-தேடுகின்ற, சேவடி-செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடிகள். அடி:ஒருமை பன்மை மயக்கம். தோன்ற-தோன்றுமாறு. முன்-அந்த அரத்துறை நாதர் அந்த வேதியர்களுக்கு முன்னால். சென்று -எழுந்தருளி. பின்-பிறகு.