திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் $3、
விளங்கி. எழ-எழுந்து கேட்க, அங்கணன்-அழகிய்" கண்களைப் பெற்றவராகிய அரத்துறைநாதர். அருளால்வழங்கிய திருவருளினால். அவை-அந்த முத்துக்குடை முதலியவற்றை. கொண்டு-பெற்றுக் கொண்டு. உடன். அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மோடு. பொங்கு-தங்களுடைய திருவுள்ளங்களில் பொங்கி எழும். காதல்-விருப்பத்தைப் பெற்ற திருத்தொண்டர்கள்: ஆகு. பெயர். எதிர்கொள-தம்மை எதிர்கொண்டு வரவேற்க; இடைக்குறை. ப்:சந்தி, போதுவார். அந்த நாயனார் எழுந்: தருளுபவரானார்.
பிறகு வரும் 204-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
"ஒரு குற்றமும் இல்லாதவர்களும், உண்மையையே பேசுபவர்களும், திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வருபவர்களும் ஆகிய வேதியர்கள் ஒரு குற்றமும் இல்லாத சீர்த்தியைப் பெற்ற சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளியவரும், ஆண்மையையும் தகுதியையும் பெற்ற வரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு எதிரில் ஒளியை உடைய முத்துப் பல்லக்கு முதலானவற்றை: பரமேசுவரராகிய அரத்துறை நாதர் வழங்கிய இனிய திருவருளினால் சுமந்து கொண்டு போனார்கள். பாடல்: வருமாறு:
மாசில் வாய்மைகெல் வாயில் மறையவர் ஆசில் சீர்ச்சண்டை ஆண்டகை யார் எதிர் தேசு டைச்சிவி கைமுத லாயின ஈசர் இன்னரு ளால்தாங்கி ஏகினார்."
மாசு-ஒரு குற்றமும். இல்-இல்லாதவர்களும்; வினை யாலனையும் பெயர். வாய்மை-உண்மையையே பேசு பவர்களும்; ஆகுபெயர். நெல்வாயில்-திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வருபவர்களும்ஆகிய இட ஆடு , பெயர், மறையவர்-வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம்.