உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。農翻曹 பெரிய புரான விளக்கம்-10

திருமுல்லைவாயில் சென்றார். செந்தமிழ்ப் பாமாலை சாத்தி வழிபட்டார். சீர்காழி வந்து சேர்ந்தார். திருமயேந்திரப் பள்ளி, திருக்குருகாவூர், திருமுல்லைவாயில் முதலிய பதிகளை வழிபட்டார். -

திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவாதம் மனைவியார் .மதங்க சூளாமணியாரும் சீர்காழி வந்து சேர்ந்தனர். அவர்கள் வரவறிந்து பிள்ளையார் வரவேற்க அவர்களும் .மகிழ்ந்தனர். தாம் பாடிய பதிக இசையைப் பாணரை வாழில் இயற்றி இறைவனை உகப்பிக்க வேண்டினார் பிள்ளையார். பாணரது யாழிசையும், பிள்ளையாரது விடற்றிசையும் ஒன்றி இறைவற்கு மிகுந்த மகிழ்ச்சி

ஆயிற்று. . . .

அன்று முதல் பிள்ளையார் செல்லும் தலம் எல்லாம் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒன்றிச் சென்று யாழிசையில் கதிக இசையை ஒன்ற பாடி வருவாராயினர்.

கொள்ளிடத் திருநதி கடந்து திருஞானசம்பந்தர் திருதி தில்லைசூழ் எல்லை பணிந்தனர். அந்தணரும், அன்பர்களும் வரவேற்க தென்திசைத் திருவாயில் வழியக உள்புகுந்து வணங்கினர். -

தில்லைவாழ் அந்தணரை முன்வைத்துத் திருப்பதிக இசைபாடி வணங்கினார். பின்னர்ப் பிரியா விடிை பெற்றுத் திருவேட்காம், திருக்கழிப்பாலை வணங்கிப் பாடி மீண்டும் தில்லை வந்தடைந்தார். தில்லைவாழந்தணர் மூவாயிரவரும் இறைவற்குத் தொண்டு பூண்டொழுகும் கணநாதராய்க் காட்சியளிக்கக் கண்டு வழிபட்டார். மீண்டும் பிள்ளையார். தில்லைப்பெருமானை வழிபட்டுப் பதிகம் பாடினார்.

நிவாநதியின் கரைவழியே சென்று, திருவெருக்கத்தம் அலியூர் (திருநீலகண்ட யாழ்ாபாணர் அவதாரத் தலம்), திருமுதுகுன்றம், வழிப்பட்டு பாடி பெண்ணாகடம் சென்று திருத்தாங்கானை மாடத்துச் சுடர்க்கொழுந்தைப் பரவிப் பேரற்றித் திருநெல்வாயில் அரத்துறை சேர்கின்றார்.