உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரிய புராண விளக்கம்-10

கோழியில். ஏ. அசைநிலை. தா-கெடுதல். இல்-இல்லாத கடைக்குறை. அர-இயங்கும் உயிர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அசரங்கள்-இயங்காமல் நிற்கும் உயிர்கள்.சரங்கள்மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, புழுக்கள், பூச்சிகள், நீர் வாழ் பிராணிகள் முதலியவை. அசரங்கள் -இயங்காமல் நின்று கொண்டிருக்கும் பலவகையான மரங் களும், செடிகளும், கொடிகளும். எலாம் - யாவும்; இடைக் குறை. சிவம்-சைவசமயத்தை. பெருக்கும்-பெருகி வளரு மாறு புரிந்தருளும். பிள்ளையார்-ஆண்குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். திரு அவதாரம் செய் தார்-திரு அவதாரம் செய்தருளினார். *

அடுத்து உள்ள 21-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவ வதாரம் செய்தருளிய அந்தக் காலத்தில் தோற்றப் பொலி வைப் பெற்ற அழகிய கழுமலமாகிய சீகாழியில் வாழும் மக்களுக்குள் எந்தப் பெயரை உடையவரும் வேறு ஊர் களுக்குப் போய் அடையும் இடையூறு இல்லாமல் சீகாழியில் வாழ்ந்து கொண்டு தங்களுடைய திருமேனிகளில் உண்டாகிய புளகாங்கிதமாகிய மயிர்க்கூச்சை அடைந்து தங்களை அறியாமலேயே ஒப்பு இல்லாத ஆனந்தம் மிகுதியாக எழுவதாகிய ஒரு மகிழ்ச்சி உண்டாகுமாறு பின்வருமாறு வார்த்தைகளைக் கூறுவார்கள். பாடல் வருமாறு:

"அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்

எப்பெயரி னோரும் அயல் எய்தும் இடை இன்றி மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவி அறி யாமே ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்."

அப்பொழுது-அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தருளிய அந்தக் காலத்தில், பொற்பு-தோற்றப் பொ விவை. உறு.பெற்று. திரு-அழகிய; *செல்வர்கள் வாழும் எனலும் ஆம்; திணை மயக்கம். க்:சந்தி. கழுமலத்தோர்.கழுமலமாகிய சீகாழியில் வாழும்