உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புாாணம் 39.

வேதங்களில் உள்ள மந்திரங்களாகிய வார்த்தைகளால் இனிய நாதம் எல்லா இடங்களிலும் விளக்கமாக அமைந்து எழுந்து கேட்கும். பாடல் வருமாறு:

பூதகண நாதர் புவி வாழஅருள் செய்த நாதன் அரு வரின்பெருமை கண்டுநலம் உய்ப்பார் ஒதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஒவா வேதமொழி யால்ஒலி விளங்கிஎழும் எங்கும்.”

பூதகண-அந்தச் சீகாழி நகரத்தில் சிவபூதகணங்களி னுடைய ஒருமை பன்மை மயக்கம், நாதர்-தலைவராகிய பிரமபுரீசர். பிரமபுரி-சீகாழி, புவி-இந்த உலகத்தில் வாழும் மக்கள் ; இடஆகுபெயர். வாழ-நல்ல வாழ்வைப் பெறுமாறு. அருள்-தம்முடைய திருவருளை, செய்த-வழங்கிய நாதன்தலைவனாகிய பிரமபுரீசன். அருளின்-வழங்கிய திருவருளினு டைய பெருமை-பெருமையை. கண்டு-பார்த்து. நலம்-நல்ல காரியங்களைப் புரிந்து ஒருமை பன்மை மயக்கம். உய்ப்பார். தங்களுடைய வாழ்க்கையை நடத்துபவர்களாகிய ஒருமை பன்மை மயக்கம். ஒது-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் கானம் செய்யும். மறையோர்-வேதியர்கள் ஒருமை பன்மை மயக்கம். பிறிது-வேறு ஒன்றை. உரைத்திடினும்-கூறினா லும். ஒவா-சிறிதேனும் குறையாத. வேத-வேதங்களில் உள்ள : ஒருமை பன்மை மயக்கம். மொழியால்-மந்திரங் களாகிய வார்த்தைகளால் ஒருமை பன்மை மயக்கம். ஒலிஇனிய நாதம். எங்கும்-சீகாழியில் உள்ள எல்லா இடங்களி லும்; ஒருமை பன்மை மயக்கம். விளங்கி எழும்-விளக்கமாக அமைந்து எழுந்து கேட்கும்.

பிறகு உள்ள 32 ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

'அந்தச் சீகாழி நகரத்தில் பல வகையான மரங்களும் பழங்களை வழங்குபவையாக விளங்கும்; பூங் கொடிகளும் மிகுதியாக வளர்ந்து படர்ந்திருக்கும்; விளங்கும் குளம், குட்டை, மடு, ஏரி, கடல், கிணறு முதலிய நீர் நிலைகளில்