శ్రీ 8 • பெரிய புராண விளக்கம்.10
நிரம்பியிருக்கும் நீரும் தெளிவோடும் குளிர்ச்சியோடும் அமைந்திருக்கும்; விளங்கும் சூரியனும் சந்திரனும் தங்களு டைய வெயிலையும் நிலாவையும் வீசும் ஆகாயத்தில் உள்ள அழுக்கு மழை பொழிவதால் போய் விடும்; என்றும் மாறு படாத இனிமையாகிய ஒலியை பருந்து, கருடன், கழுகு, காக்கை, தூக்கணாங்குருவி, மைனாக்குருவி, கிளி, சிட்டுக் குருவி, மீன் கொத்திப் பறவை, செம்போத்து, மரங் கொத்திக் குருவி, அன்னப் பறவை, வாத்து முதலிய பறவைகள் கூவும் சத்தங்கள் நல்லவையாகிய கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென் கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகள் எல்லாவற் றிலும் காதில் விழும். பாடல் வருமாறு:
பயன்தருவ ப. றருவும் வல்லிகளும் மல்கித் தயங்குபுனலும் தெளிவு தண்மையுடன் கண்ணும்: வயங்கொளி விசும்புமலி சைம்கழியும் மாறா கயம்புரிவ புள்ளொலிகள் நல்லதிசை எல்லாம்.' பயன்-அந்தச் சீகாழி நகரத்தில் பல வகையான மரங் களும் பழங்களை ஒருமை பன்மை மயக்கம். தரும்-வழங்கு வையாக விளங்கும்; வினையாலனையும் பெயர். அந்த மரங்களாவன: மாமரம், பலாமரம், பல வகையான வாழை மரங்கள், தென்னமரம், பனைமரம், வில்வமரம்,விளாமரம், நாவல்மரம், வேப்பமரம், இலுப்பை மரம், நெல்லிமரம் முதலியவை. வல்லிகளும்-பூங்கொடிகளும். அவையாவன: மல்லிகைக் கொடி, முல்லைக் கொடி, செந்தாமரைக் கொடி, வெண்டா மரைக் கொடி, குமுதக் கொடி, அல்லிக் கொடி, ஆம்பற் கொடி முதலியவை. மல்கி-மிகுதியாக வளர்ந்து படர்ந்திருக்கும். த்: சந்தி. தயங்கு-விளங்கும். புனலுமகுளம், குட்டை, மடு, ஏரி, கடல், கிணறு, கால்வாய், ஆறு முதலிய நீர் நிலைகளில் நிரம்பியிருக்கும் நீரும். தெளிவுதெளிவோடும். தண்மையுடன்-குளிர்ச்சியோடும். நண்ணும் - அமைந்திருக்கும். வயங்கு-விளங்கும். ஒளி-சூரியனும் சந்திர னும் தங்களுடைய வெயிலையும் நிலாலையும் வீசும்