உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 45

களுடைய சாயல்கள் மயில்களினுடைய சாயல்கள் என்று கூறுமாறு பரிசுத்தமாகிய அழகிய திருவிளக்குக்களோடு தங்களுடைய காதுகளில் ஒளியை வீசும் மகரக் குழைகள் மின்னலைப் போல ஒளியை வீச அழகு மருவிய செல்வம் நிறைந்த தங்களுடைய திருமாளிகைகளை அழகும் தோற்றப் பொலிவும் உடையவையாகும் வண்ணம் புரிவார்கள். பாடல் வருமாறு:

மாமறை விழுக் குல மடந்தையர்கள் தம்மில் தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயில் என்னத் தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக் காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்."

மா-பெருமையைப் பெற்ற, மறை விழுக்குல.மேலான சாதியாகிய அந்தணர் சாதியிற் பிறந்த மறை: திணை மயக்கம். மடந்தையர்கள்-மடப்பத்தைப் பெற்ற பெண் மணிகள். தம்மில்-தங்களுக்குள்ளே. தாம் உறு-தாங்கள் அடையும். மகிழ்ச்சியொடு ஆனந்தத்தோடு. சா ய ல்தங்களுடைய சாயல்கள்: ஒருமை பன்மை மயக்கம். மயில். மயில்களினுடைய சாயல்கள் ஆகு பெயர். மயில்: ஒருமை பன்மை மயக்கம். என்ன-என்று கூறுமாறு. த்: சந்தி. து. பரிசுத்தமாகிய. மணி-அழகிய விளக்கொடு-திருவிளக்குக் களோடு, ஒருமை பன்மை மயக்கம். சுடர்-ஒளியை வீசும். க்:சந்தி. குழைகள்-மகரக்குழைகள். மின்ன-தங்களுடைய காதுகளில் மின்னலைப் போல் ஒளியை, வீச. க்:சந்தி. காமர். அழகு மருவிய. திரு-செல்வம் நிறைந்த மாளிகை-தங் களுடைய திருமாளிகைகளை ஒருமை பன்மை மயக்கம். கவின் அழகும். பொலிவு-தோற்றப் பொலிவும். செய்வார். உடையவை ஆகும் வண்ணம் புரிவார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு உள்ள 37-ஆம் பாடவின் உள்ளுறை வருமாறு:

"அந்தச் சீகாழி நகரத்தில் வாழும் பெண்மணிகள் வாசனைப் பொடியோடு குளிர்ச்சியைப் பெற்ற மலர்களில்.