திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 75.
பின்சென்ற பிள்ளையார் தமைநோக்கிப் பெருந்தவத்
தோன். முன்செல்கை தனை ஒழிந்து முனிவார்போல்
விலக்குதலும் மின்செய்பொலங் கிண்கிணிக்கால் கொட்டி அவர்
'உன்செய்கை இதுவாகில் போதென்றங் குடன்
சென்றார்.'
பின்-தம்முடைய தந்தையாராகிய சிவபாத இருதயருக் குப் பின்னால. சென்ற-எழுந்தருளிய. பிள்ளையார் தமைஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. தமை: இடைக்குறை. தம்: அசைநிலை. நோக்கிபார்த்து. ப்: சந்தி. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். தவத்தோர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ராகிய ஆண் குழந்தையாரைப் பெற்றெடுப்பதற்கு உரிய தவத்தைப் புரிந்த அந்தச் சிவபாத இருதயர். முன்-முன் னால், செல்கை தனை-போவதை. தனை: இடைக்குறை. தன்: அசைநிலை. ஒழிந்து-விட்டு விட்டு. முனிவார் போல்தம்முடைய புதல்வரைச் சினந்து கொள்பவரைப் போல். விலக்குதலும்-தம்முடைய புதல்வரைத் தம்மோடு வாராத வாறு தடுத்தவுடன். மின்-மின்னலைப் போல்; உவம ஆகு பெயர். செய்-ஒளியை உண்டாக்கும். பொலங் கிண்கிணி. தங்கத்தாற் செய்ய்ப் பெற்ற கிண்கிணிகளை அணிந்திருக் கும். கிண்கிணி-கிண்கிணி என்று ஒலிக்கும் அணிகலன். க்: சந்தி. கால்-தம்முடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். கொட்டி-தரையில் தப்புத்திப் பென்று தட்டிக் கொண்டு. அவர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ராகிய ஆண் குழந்தையார். மீளா மை-திரும்பி எழுந்தருளிச் செல்லாத பான்மையால். உன்-உன்னுடைய. செய்கைசெயல். இதுவாகில்-இது ஆனால். போது-என்னுடன் வரு வாயாக. என்று-என அந்தச் சிவபாத இருதயர் கூறிவிட்டு, அங்கு-அந்த இடத்தில். உடன்-அந்த நாயனாரை அழைத்