உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹& பெரிய புராண விளக்கம்-10

1. பிள்ளையாள் தமைக்கரையில் வைத்துத்தாம் பிரிவஞ்சித்

தெள்ளுநீர்ப் புகமாட்டார் தேவியொடும் திருத்தோணி

வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணிவாவி உள்ளிழிந்து புனல்புக்கார் உலகுய்ய மகப்பெற்றார்." இந்தப் பாடலிலும் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. உலகு-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்: இடஆகுபெயர் உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். மக-ஒர் ஆண் குழந்தையை. ப்: சந்தி. பெற்றார்-ஈன்றெடுத் தவராகிய சிவபாத இருதயர். பிள்ளையார் தமை-தம் முடைய ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரை. தமை: இடைக்குறை. தம்: அசைநிலை. க்: சந்தி. கரையில்-பிரமதீர்த்தத்தினுடைய கரையில், வைத்துஅமருமாறு செய்து விட்டு. த்: சந்தி. தாம் என்றது சிவபாத இருதயரை. பிரிவு- தம்முடைய ஆண் குழந்தையாரைப் பிரிவதற்கு.அஞ்சி-அச்சத்தை அடைந்து. தெள்ளு-தெளிவாக உள்ள. நீர்-அந்தப் பிரமதீர்த்தத்தில் நிரம்பியுள்ள புனலில். ப்: சந்தி. புக-இறங்க. மாட்டார்-முடியாதவராகி; முன்றெச் சம். தேவியொடும். தம்முடைய தர்மபதிதினியாராகிய பெரிய நாயகியாரோடும். திரு-அழகிய. த்: சந்தி. தோணிசீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையில் விளங்கும் தோணியில். வள்ளலார் இருந் தாரை-வீற்றிருந்தவரும் வள்ளலாரும் ஆகிய தோனியப் பரை. எதிர்-அந்த அப்பருடைய சந்நிதியில், வணங்கி-அந்த அப்பரைப் பணிந்துவிட்டு. மணி-பளிங்கைப் போன்ற நீர் திரம்பிய உவம ஆகுபெயர். வாவிஉள்-வாவிக்குள். வாவி: வாபீ என்ற வட சொல்லின் திரிபு. இழிந்து-பிரமதீர்த்தத் துக்குள்ளே இறங்கி. புனல்-நீரில். புக்கார்-புகுந்தார்.

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தமையால் உலகு உய்தல்: 'வையமெலாம் உய்யவரு மறைச் சிறுவர்.'", "ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர்.', "பார் உய்ய வந்தவர்.','வையகம் உய்ய வந்த வள்ளலார்.", 'உலகெலாம் உய்யக் கொண்ட திருஞான சம்பந்தர்.",