80 - பெரிய புராண விளக்கம்-10.
தோடு; உருபு மயக்கம். அகமருடம் அகமருட மந்திரத்தை ஓதி.படியநீர்-நீரில் படியுமாறு.பேராது-வெளியில் வாராமல், பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். காவல்-பாது காப்பை பெற்றாராய்-பெற்றவராகி. மூழ்கினார்-பிரம தீர்த்தத்தில் நிரம்பியுள்ள புனலில் முழுகினார்.
பிறகு உள்ள 61-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:
'இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய அந்தணராகிய சிவபாத இருதயர் பிரமதீர்த்தத்தில் முழுகியவுடன் அவரைத் தாம் பாராமல் கண நேரமும் சகியார் என்னும் நிலைமை ஹேதுவாக பரமேசுவரராகிய பிரமபுரீசருடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை முறை யாக விரும்பிய முன்பு இருந்த உணர்ச்சி மூண்டு எழ நிறைந்த நீரைப் பெற்ற வாவியாகிய அந்தப் பிரமதீர்த்தத் தினுடைய கரையில் நின்று கொண்டிருந்தருளும் ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அழுதருள ஆரம்பித்தார். பாடல் வருமாறு:
மறைமுனிவர் மூழ்குதலும் மற்றவர்தம் மைக்கானா திறைதரியார் எனும்நிலைமை தலைக்கீடா ஈசர்கழல் முறைபுரிந்த முன்உணர்வு மூளஅழத் தொடங்கினார் கிறைபுனல்வா விக்கரையில் கின்றருளும் பிள்ளையார்."
இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந் துள்ளது. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்மை மயக்கம். முனிவர்-அந்தணராகிய சிவபாத இருத யர். மூழ்குதலும்-பிரமதீர்த்தத்தில் முழுகியவுடன் மற்று: ஆசைநிலை. அவர் தம்மை-அந்தச் சிவபாத இருதயரை. தம்: அசைநிலை. க்: சந்தி, காணாது-பார்க்காமல். இறை-கண நேரமும். தரியார்-சகியார். எனும்-என்னும்: இடைக்குறை.