உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 103

பார்த்து அது பழைய ஒலைதான் என்று அந்தக் கணக்குப் பிள்ளை தெரிந்து கொண்டான். த்:சந்தி. தெருள்-அறிவுத் தெளிவை. பெறு-பெற்ற, சவையோர்-நியாய சபையில் வீற்றிருக்கும் வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கேட்ட-நன்றாகக் கேட்கும் வண்ணம். வாசகம்-அந்த மூல அடிமை ஒலையில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளை, ஒருமை பன்மை மயக்கம். செப்புகின்றான்-படித்துச் சொல்லுகிறான். - -

அடுத்து உள்ள 59-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையான இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவனும் திருநாவலூரில் வாழும் ஆதி சைவனும் ஆகிய ஆரூரனாகிய யான் செய்து கொடுக்கும் அடிமை ஒலையாவது; பெருமையைப் பெற்ற முனிவனாகிய திருவெண்ணெய் நல்லூரில் வாழும் பித்தனுக்கு நானும் என்னிடம் பின்னால் வரும் முறைப்படி அமைந்த என்னு டைய பரம்பரையில் பிறப்பவர்களும் வழி வழியாகத் தொண்டுகளைப் புரிவதற்கு இந்தச் சாசன ஒலையை மனம் மொழி என்னும் இரண்டினாலும் சம்மதித்து வரைந்து கொடுத்தேன்; இந்தச் சாசனத்துக்கு இவை என்னுடைய பெயராகிய எழுத்துக்கள். பாடல் வருமாறு:

அருமறை நாவல் ஆதி சைவன்ஆ ரூரன் செய்கை பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப்பித்தனுக் கியானும்

- . . . என்பால் வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை இருமையால் எழுதி நேர்ந்தேன்; இதற்கிவை

. - என்ன ழுத்து.' அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம் வேதம்,