உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 331;

அன்பே-பக்தியையே. கைக் கொண்டு-மேற்கொண்டு. செல. திருவாரூர்ப் பூங்கோயிலுக்குப் போகுமாறு; இடைக்குறை. உய்ப்ப-அந்தப் பரவையாரைச் செலுத்த. -

அடுத்து வரும் 146-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பரவையினுடைய பக்கத்தில் ஒடிச் சென்று தன்னுடைய கரும்பு வில்லை வளைத்து ஐந்து மலரம்புகளாகிய ஆயுதங் களைப் பெற்றவனும் அங்கம் இல்லாதவனுமாகிய மன்மதன் எய்த அம்புகள் வளைத்துக் கொண்டு எந்தப் பக்கத்திலும் போக முடியாமல் தடையை உண்டாக்க, மடப்பம் வருதலை யுடைய அந்தப் பெண்மணியும் தேன் நிரம்பிய மலர் மாலையைத் தன்னுடைய கூந்தலின்மேல் சிறகுகளைப் பெற்ற வண்டுகள் கூடிக்கொண்டு மொய்த்து ரீங்காரத்தைச் செய்ய, திருவாரூர்ப் பூங்கோயிலை விரும்பி எழுந்தருளியுள்ள தலைவனாகிய வன்மீக நாதனுடைய தங்கத்தை வேய்ந்த விமானத்தைக் கொண்ட ஆலயத்துக்கு எழுந்தருளி அதற் குள்ளே நுழைந்தாள். பாடல் வருமாறு: - - : பாங்கோடிச் சிலைவளைத்துப் படை அகங்கன்

விடுபாணம் தாம்கோலி எம்மருங்கும் தடைசெய்யiமடவரலும் தேங்கேர்தை மலர்க்குழல்மேற் சிறைவண்டு

- - - கலந்தார்ப்பப் பூங்கோயில் அமர்ந்தபிரான் பொற்கோயில்

- - போய்ப்புகுந்தார். ' பாங்கு-பரவையினுடைய பக்கத்தில். ஒடி-ஒடிச்சென்று. ச் சந்தி. சிலை வளைத்து-தன்னுடைய வில்லாகிய கரும்பை வளைத்து. ப்: சந்தி. படை-ஆயுதங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அநங்கன்-அங்கம் இல்லாத மன்மதன் விடு-எய்த, பாணம்தாம்-மலரம்புகள்: ஒருமை பன்மை மயக்கம். தாம்: அசைநிலை. அவனுடைய அம்புகளாகிய ஐந்து மலர்களாவன: தாமரை மலர், மாமலர், அசோக மலர், முல்லை மலர், நீலோற்பல மலர் என்பவை. கோலிபரவையை வளைத்துக் கொண்டு. எம்மருங்கும்-எந்தப்

பெ.-2-21