உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀岛0 பெரிய புராண விளக்கம்-2

.ணாகிய வன்மீக நாதனுடைய ஆலயத்துக்குள் நுழைய.” பாடல் வருமாறு:

என்றினைய பலவும்கினைக் தெம்பெருமான்

- அருள்வகையான் முன்தொடர்ந்து வரும்காதல் முறைமை

> யினால் தொடக்குண்டு, நன்றெனையாட் கொண்டவர்.பால் கண்ணு

வன். என் றுள்மகிழ்ந்து சென்றுடைய நம்பியும்போய்த் தேவர் பிரான் -

கோயில்புக. '

இந்தப் பாடல் குளகம். என்று-என. இணைய-இத்த கைய. பலவும்-பல எண்ணங்களையும். நினைந்து-சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணி. எம்பெருமான்-அடியேங்களு டைய தலைவனாகிய கைலாசபதி. அருள்-வழங்கிய திருவரு ளினுடைய வகையான்-வி த த் தி னா ல். முன்-இந்தப் பிறவிக்கு முன்னாலிருந்து. தொடர்ந்து-தொடர்ச்சியாக அமைந்து. வரும்-உண்டாகி வரும். காதல்-காதலாகிய, முறைமையினால்-முறையால்; உறவு முறையால். தொடக் குண்டு-கட்டுப்பட்டு. நன்று-நன்றாக, எனை-அடியேனை;

இடைக்குறை. ஆட்கொண்டவர்பால்-த டு த் து ஆட் கொண்டவராகிய வன்மீக நாதரிடம். நண்ணுவன்

போவேன். என்று-என. உள்-தம்முடைய திருவுள்ளத்தில். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. சென்று-தம்முடைய திரு மாளிகையிலிருந்து எழுந்தருளி. உடைய நம்பியும்-ஆளுடைய நம்பியாகிய அந்த நாயனாரும். போய்-சென்று. த், சந்தி. தேவர்.தேவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். பிரான்தலைவனாகிய வன்மீக நாதனுடைய. கோயில்-திருவாரூர்ப் பூங்கோயிலுக்குள். புக-துழைய.

பிறகு உள்ள 150-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: பரவையார் என்னும் மாதரசியார் வலமாக வந்து. வன்மீக நாதரை வணங்கி விட்டுத் துதித்துச் சுந்தர மூர்த்தி