உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 3.33. "

நாயனாருக்கு முன்பாகவே அரசராகிய வன்மீக தாதருடைய ஆலயத்திலிருந்து ஒரு பக்கமாக வெளியில் வந்தார்: அப்போது நம்பி ஆரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டிருந்த காதலால் :ெல் வியலாகிய அந்தப் பரவையாரை விரும்பிப் பாம்புகளாகிய மாயையை அணிந்த வன்மீக நாதருடைய திருவடிகளை வணங்கினார். பாடல் வருமாறு:

பரவையார் வலம்கொண்டு பணிந்தேத்தி

முன்னரே புரவலனார் கோயிலினின் றொருமருங்கு

புறப்பட்டார், விரவுபெருங் காதலினால் மெல்லியலார்

தமைவேண்டி அரவின்ஆ ரம்புனைந்தார் அடிபணிந்தார்

ஆரூரர். ' பாவையார்-பரவையார் என்னும் மாதரசியார். வலம் கொண்டு-வலமாக வந்து, பணிந்து-வன்மீக நாதரை வணங்கி. ஏத்தி-துதித்துவிட்டு. முன்னர்-சுந்தர மூர்த்தி நாயனாருக்கு முன்னால், ஏ: அசை நிலை. புரவலனார்அரசராகிய தியாக ராருடைய. கோயிலினின்று-ஆலயத். திலிருந்து. ஒரு மருங்கு-ஒரு பக்கமாக. புறப்பட்டார்வெளியில் வந்தார். விரவு-தம்முடைய திருவுள்ளத்தில் கொண்ட பெரும்-பெரியதாக இருக்கும். காதலினால்காதலால். மெல்வியலார்தமை-மெல்லியலாராகிய அந்தப் பரவையாரை. தம்: அசை நிலை. தமை: இடைக்குறை. வேண்டி-அடைய விரும்பி. அரவின்-பாம்புகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். ஆரம்-மாலையை. புனைந்தார்-அணிந்த வராகிய வன்மீக நாதருடைய. அடி-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். ஆரூரர்-நம்பியாரூரராகிய அந்த நாயனார். பணிந்தார்-வணங்கினார்.

மெல்லியலார்: ' மெல்லினத்தார் பக்கல் மேவினர்.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "மெல்லியல்