தடுத்தாட்கொண்ட புராணம் 3恐爵
"மயிலியல் உமையினை. (இராவணன் பிறப்புப் படலம் 49), 'புனமயிற் சாயற் பைம்பொற் பூண்முலை ஒருத்தி." (அசுவமேத யாகப் படலம், 92), 'மயில் நிறத் தவளை." (சந்திரகேதுப் படலம், 7) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றைக் காண்க.
இலவ இதழ் 'இலவ இதழ் வாய் உமை." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "இலவிதழ்வாய் வீழ்வார்.” என்று பட்டினத்துப் பிள்ளையாரும், "இலவிதழ்த் துவர்விட." (உண்டாட்டுப் படலம், 24), இலவும் இந்திர கோபமும் புரை இதழ் இனியோய்.” (சித்திரகூடப் படலம், 25) என்று கம்பரும் பாடியருளியலற்றைக் காண்க. .
பிறகு வரும் 175-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
"நறுமணம் கமழும் மென்மையான கூந்தலைப் பெற்ற பெண்மணிகளே, நீங்கள் செய்கிற செயலாகிய இது எதற்காக? கலைகளையும் ஒளியையும் பெற்ற சந்திரன் என்னைச் சுடுகின்றான்; இந்தச் சந்தனக் குழம்பாகிய நெருப்பைப் பன்னீரோடு கலந்து என் உடம்பின்மேல் தடவு கின்ற கொடியவர்களாகிய மாதர்களே, இதைச் செய்யாமல் விட்டு விடுங்கள்: விட்டு விடுங்கள்: இங்கே வந்து வீசுகின்ற சந்திரனுடைய நிலாவும் நறுமணம் நிரம்பிய பொதியில் மலையிலிருந்து வரும் தென்றற் காற்றும் நெருப்பைப்போல வருகின்றன; அழகிய குளிர்ச்சியைப் பெற்ற கங்கையாற்றின் நீரும் பாம்பும் தங்கியிருக்கும் சடாபாரத்தைத் தன்னுடைய தலையின்மேல் கொண்ட வன்மீக நாதனுடைய திருவருளைப் பெற்று அதைத் தம்முடைய உடைமையாக உடையவராகிய சுந்தர மூர்த்தி நாயனார் தம்முடைய ருவருளை
வழங்காமல் இருக்கிறார். பாடல் வருமாறு:
கந்தம் கமழ்மென் குழலீர், இதுஎன்?
கலைவாள் மதியம் கனல்வான் எனை இக் சந்தின் தழலைப் பணிநீர் அளவித்
தடவும் கொடியீர், தவிரீர் தவிரீர், பெ.-2-25