உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 பெரிய புராண விளக்கம்-2

  • மன்னும் புகழ்கா வலர்கோன் மகிழ,

மங்கை பரவை தன்னைத் தங்தோம்; இன்னவ் வகைகம் அடியார் அறியும்

படியே உரைசெய் தனம்’ என் றருளிப் பொன்னின் புரிபுன் சடையன் விடையன்

பொருமா கரியின் உரிவை புனைவான் அன்னக் கடையாள் பரவைக் கணிய

தாரு ரன்பால் மணம். என் றருள. '

இந்தப் பாடல் குளகம். மன்னும்-கிலை பெற்று விளங்கும். புகழ்-புகழைப் பெற்ற நாவலர்-திருநாவலூரில் வாழும் மக்களை ஒருமை பன்மை மயக்கம். கோன்-ஆட்சி புரியும் அரசராகிய சுந்தர மூர்த்தி நாயனார். மகிழமகிழ்ச்சியை அடையும் வண்ணம். மங்கை-மங்கைப் பருவத்தை அடைந்தவளாகிய, பரவை தன்னை-பரவையை: தன்: அசைநிலை. த், சந்தி. தந்தோம்-உனக்கு மனைவியாக வழங்கினோம். இன்ன-இத்தகைய வ்: சந்தி; செய்யுளின் ஒசை நோக்கி வந்த மெய்யெழுத்து. வகை-விதத்தை. நம்எம்முடைய அடியார்-அடியவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அறியும்-தெரிந்து கொள்ளும். படி-விதம். ஏ. அசை நிலை. உரை செய்தனம்.யாம் கூறினோம். என்று-என. அருளி-திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. ப்: சந்தி. பொன்னின்-தங்கத்தைப் போன்ற புரி-புரிகளைக் கொண்ட: ஒருமை பன்மை மயக்கம். புன்-சிவந்த சடையன்-சடாபாரத். தைத் தன்னுடைய தலையின்மேற் பெற்றவனும் விடையன் இடப வாகனத்தை ஒட்டுபவனும், பொரு-போர்புரியும். மாபெரிய கரியின்-தாருகாவனத்து முனிவர்கள் ன்னைக் கொல்லுவதற்காக விடுத்த "AB... உரித்த தோலை, புனைவான்-போர்வையாகப் போர்த்துக் கொண்டவனும் ஆகிய வன்மீக நாதன். அன்ன-அன்னப் பறவையின் நடையைப் போன்ற; ஆகு பெயர். ந்: செய்யுள் ஒகையை நோக்கி வந்த ஒற்றெழுத்து. நடையாள்-நடக்கும் நடையைப் பெற்றவளாகிய, பரவைக்கு-பரவை என்னும்