தடுத்தாட்கொண்ட புராணம் 43
ஆடவருக்குக் காளை மாடுஉவமை; ஏறன்ான் வைகு
றும்.’’, ஏறனார்க்கிருளை நீக்க', 'விடையவன்னவன்,' (சீவகசிந்தாமணி,1351, 1542, 742), மால்விடையும். .கான நடந்தான். , ' விடைபொரு தடையினான். ’, மழவிடை யனையாரும்.' வெவ்வின்ட போலிள வீரனை.’’, வெவ் விடை யனைய போர்வீரத் தூதனும். , விடையேநிகர் அங்கதன்.', 'விடைக்குவங்கள் போல் இராக்கதப் பதாதி யும் மிடைந்த,”, விடைக்கு வங்கனின் நடுவணோர் விடை கிடந்தென்னக் கடைக்கண் தீயுக அங்கதக் களிற்றினைக் கண்டான்.'" (கார்முகப் படலம், 22, எழுச்சிப் படலம்,
10, கடிமணப் படலம், 23, அயோமுகிப் படலம், 38, காட்சிப்பட்லம், 54, அதிகாயன் வதைப் படலம், 251, பிரமாத்திரப் படலம், 99, 197) என்று கம்பராமாயணத்தில் வருவனவற்றைக் காண்க.
பிறகு உள்ள 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
ஆண்மையையும் தகுதியையும் பெற்ற இந்தச் சுந்தர மூர்த்தி என்னும் திருநாமத்தைக் கொண்ட மணமகனுடைய திருவருட்பார்வையினுடைய வெள்ளத்துக்குள் நாம் துளைந்து ஆனந்தத்தை அடைந்தோம்’ எனறு மனம் வந்த புத்துாரில் வாழும் சில பெண்மணிகள் கூறுவார்கள்; "தாவி ஓடிய குதிரையும் நம்மிடத்தில் நாம் காணும் தகுதி பெற நடந்து வந்தது' என்று சில மாதர்கள் இயம்பு வார்கள்; ஆபரணங்களோடு விளங்கும் இந்த மண்மகனே புண்ணியமே வடிவெடுத்தவன்' என்று சில மங்கைமார் நவில்வார்கள்; அங்கே கூடியிருந்த மடப்பத்தைப் பெற்ற பெண்மணிகளினுடைய கூட்டம் இத்தகைய வர்த்தைகளைக் கூறச் சுந்தரமூர்த்தி நாயனார் யோகப் புரவியின்மேல் எழுந்தருளினார். பாடல் வருமாறு: -