44 பெரிய புராண விளக்கம்-2
ஆண்டகை அருளின் நோக்கின்
வெள்ளத்துள் அலைக்தோம். என்பார்; 'தாண்டிய பரியும் நம்பால்
தகுதியின் கடந்த தென்பார்; 'பூண்டயங் கிவனே காணும்
புண்ணிய மூர்த்தி என்பார்; ஈண்டிய மடவார் கூட்டம்
இன்னன இசைப்பச் சென்றார். ’’ ஆண்-ஆண்மையையும். தகை-தகுதியையும் பெற்ற இந்தச் சுந்தரமூர்த்தியினுடைய. அருளின் நோக்கின்திருவருட் பார்வையாகிய. வெள்ளத்துள்-வெள்ளத்தில். அலைந்தோம்-நாம் துளைந்து இன்பத்தை அடைந்தோம். என்பார்-என்று மணம் வந்த புத்துரில் வாழும் சில பெண்
மணிகள் கூறுவார்கள்: ஒருமை பன்மை மயக்கம். தாண்டிய-தாவி ஒடிய பரியும்-இந்த மணமகன் ஏறிக் கொண்டிருக்கும் குதிரையும். நம்பால்
நம்மிடத்தில். தகுதியின்-இந்த மணமகனைப் பார்க்கும் தகுதியை அடையும் வண்ணம். நடந்தது. ஒடுவதை விட்டு விட்டு நடந்து வந்தது. என்பார்-என்று சில மங்கைமார் இயம்புவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பூண்-பலவகை ஆபரணங்களோடு, ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: தங்கச் சங்கிலி, சன்ன வீரம், கிரீடம், தங்கக் கைக் காப் புக்கள். தங்க அரைஞாண் கால்களில் சிலம்புகள், கைவிரல் களில் மோதிரங்கள் முதலியவை. தயங்கு-விளங்கும். இவனே- இந்த மணமகனே. புண்ணிய-புண்ணியங்களின்; ஒருமை பன்மை மயக்கம். மூர்த்தி - வடிவமாக விளங்கு பவன். மூர்த்தம்-வடிவம். என்ப்ார்-என்று சில மாதரசி கள் மொழிவார்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஈண்டியகூட்டமாகக் கூடிய, மடவார்-மணம் வந்த புத்துாரில் வாழும் மடப்பத்தைப் பெற்ற பெண்மணிகளினுடைய. கூட்டம்-குழு. இன்னன-இத்தகைய வார்த்தைகளை.