தடுத்தாட்கொண்ட புராணம் - 59 .
'இவ்வாறு தன்னுடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் படைத்த கிருபாபுரீசன் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, அந்தத் திருமணப் பந்தலில் நின்றுகொண்டிருந்த தனக்கு ஒப்பார் யாரும் இல்லாதவனாகிய சுந்தரமூர்த்தி, அவ்வாறு நமக்கு நடுவில் இருப்பதாகிய ஒரு வழக்கை என்னிடத் தில் நீ பெற்றது இருக்குமானால் அதைத் தீர்த்துவிட் டால் அல்லாமல் நான் என்னுடைய திருமணத்தைப் புரிந்து கொள்ள மாட்டேன்; அந்த வழக்கு முழுவதையும் இந்த இடத்தில் நீ கூறுவாயாக’’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்யவே, தனக்கு ஓர் எல்லையும் முடிவும் இல்லாதவனா கிய கிருபாபுரீசன். பாடல் வருமாறு:
'நெற்றிவிழி யான்மொழிய கின்றங்கள் இல்லான்
"உற்றதொர் வழக்கெனிடை உேடைய துண்டேல்
மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன், முற்றஇது சொல்லு கென எல்லைமுடி வில்லான்.'
இந்தப் பாடலும் குளகம். நெற்றி-தன்னுடைய நெற்றி யில். விழியான்-ஒற்றைக் கண்ணைப் பெற்றவனாகிய கிருபாபுரீசன். மொழிய-இவ்வாறு திருவாய் மலர்ந்தரு ளிச் செய்தவுடன். நின்ற-திருமணப் பந்தலில் நின்று கொண்டிருந்த நிகர்-தனக்கு வேறு யாரும் சமானம், இல்லான்-இல்லாதவனாகிய சுந்தரமூர்த்தி, உற்றது-அவ் வாறு உண்டானதாகிய, ஒர்-ஒரு. வழக்கு-வழக்கை. நீ உடையது-நீ பெற்றது. உண்டேல்-இருக்குமானால், மற்று:அசை நிலை. அது-அந்த வழக்கை. முடித்தலதுதீர்த்துக்கொண்டால் அல்லாமல். இ:குற்றியலிகரம். யான்நான். வதுவை-என்னுடைய திருமணத்தை. செய்யேன். புரிந்துகொள்ள மாட்டேன். முற்ற-அது முழுவதையும். இது-இந்த இடத்தில். சொல்லுக-கூறுவாயாக. எனஎன்று சுந்தரமூர்த்தி திருவாய் மலர்ந்தருளிச் செய்ய: இடைக் குறை. சொல்லுகென: தொகுத்தல் விகாரம்.