பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 6 o'

பொரு-ஒப்புக் கூறுவதற்கு. அரும்-அருமையாக இருக் கும். சிறப்பின்-சிறப்பில். மிக்கார்-மிகுதியாக இருப்பவர் களாகிய, ஒருமை பன்மை மயக்கம். இவர்க்கு-இந்த நாக னுக்கும் தத்தைக்கும்; ஒருமை பன்மை மயக்கம். இனி-இனி மேல், ப்: சந்தி. புதல்வர்-புதல்வர்களை ஒருமை பன்மை மயக்கம். பேறே-பெறுதவே, அரியது-அருமையானது. என்று -என. எவரும்-யாரும். கூற-சொல்ல. அதற்படு-புதல்வரைப் பெறுவதாகிய அந்த எண்ணத்தில் உண்டான, காதலால்விருப்பத்தால். ஏ. அசைநிலை. முருகு-நறுமணம். அலர்பரவும். அலங்கல்-மலர் மாலையை அணிந்த 'செவ்-சிவந்த வேல்-வேலாயுதத்தை ஏந்திய, முருகவேள்-முருகப்பெருமான், திருக்கோயிலின். முன்றில்-முற்றத்துக்கு. சென்று-போய். பரவுதல்-அவனை வாழ்த்துதலை. செய்து-புரிந்து, நாளும் ஒவ்வொரு நாளும். பராய்க்கடன்-வழிபடும் கடமையாகிய, நெறியில்-வழியில். நி. ற் பார்-நிற்பவர்கள் ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம். -

பின்பு உள்ள 11-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

சேவற் கோழியுடன் கோடுகளைப் பெற்ற மயிற். கூட்டங்களைத் திருக்கோயிலுக்கு அர்ப்பணமாக விட்டு, தோரணத்தையும் மாணிக்கங்களையும் தொங்கவிட்டு, வண்டுகள் மொய்க்கும் அழகிய கதம்ப மாலைகளையும். தொங்கவிட்டு, யுத்தத்தைச் செய்வதையே தனக்கு அலங்காரமாகக் கெரண்ட நீண்ட வேலாயுதத்தை ஏந்திய முருகக் கடவுளுக்கு அவனுடைய புகழை விரும்பிப் பாடும். குரவைக் கூத்தை ஆட, பெருமையை உடைய தெய்வப் பெண்ணாகிய பூசாரிச்சி நடனம் செய்யப் பெரிய திரு. விழான்வ நடத்திய பிறகு." LTLEು வருமாறு:

வாரணச் சேவ லோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத் தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் காற்றிப் போரணி கெடுவே லோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் - பேரணங் காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை. :