பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 63.

வென்ற வெற்றியை உடைய தலைவருமாகிய முருகப் பெருமானார் வழங்கிய திருவருளினால், பாடல் வருமாறு:

பயில்வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் புதியாம்

நாகற் கெயிலுடைப் புரங்கள் செற் ற எங்தையார் - . ... மைந்த ரான மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரம் கிழித்த திண்மை அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார்

அருளி னாலே.'

இந்தப் பாடல் குளகம். பயில்-போர் செய்து பழகிய தால் உண்டாகிய , வடு-தழும்புகள்: ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பொலிந்த-விளங்கிய, யாக்கை-உடம்பு களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். வேடர்தம்வேடர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். தம்: அசை நிலை. பதியாம் - தலைவனாக விளங்கும். நாகற்குநாகன் என்பவனுக்கு எயில்-மதில்களை ஒருமை பன்மை மயக்கம். உடைபெற்ற, ப் : சந்தி. புரங்கள்.வித்யுன் மாலி, தாரகாட்சன், வாணன் என்னும் மூன்று அசுரர் களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங் களை. செற்ற-அழித்த, எந்தையார்-அடியேங்களுடைய தந்தையாரைப் போ ன் ற காளஹஸ்தீசுவரருடைய. அடியேங்கள்' என்றது சேக்கிழார் தம்மையும் மற்றச் சிவபெருமானுடைய அடியவர்களையும் சேர்த்துக் கூறியது. மைந்தரான-இளைய புதல்வரான, மயிம்-மயிலை. உடைதம்முடைய. க்: சந்தி. கொற்ற - வெற்றியைத் தரும். ஊர்தி-வாகனமாகப் பெற்றவரும், திணை மயக்கம். வரை-கிரெளஞ்ச மலையினுடைய. உரம்-நடுவிடத்தை. கிழித்த-கிழிப்பதைப் போலப் பொடியாக அழித்த; "கிழியும்படி அடற்குன்றெரிந்தோன்.” என்று கந்தர் அலங்காரத்தில் வருவதைக் காண்க. திண்மை-உறுதியைப் பெற்ற, அயில்-வேலாயுதத்தை. உடைபெற்ற, த், சந்தி.