திருநாவுக்கரசு நாயனார் புராணம் 133 பெற்றுத் திகழும் இனிய சுவையைப் பெற்ற இசைப் பாடல் கள் பலவற்றைப் பாடியருளி அந்தச் சிவத்தலத்தில் இனிமை யோடு தங்கிக் கொண்டிருந்து கரிய நிறம் நிலைபெற்று விளங்கும் நீலக் கறையைப் பெற்ற திருக்கழுத்தை உடைய வராகிய பிரமபுரீசருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங் கும் இரண்டு திருவடிகளையும் வணங்கி விட்டு அந்தத் திருக் கடவூர்த் திருமயானத்தை விட்டுப் புறப்பட்டு இரதம் நின்று கொண்டிருக்கும் அழகிய திருவிதியைப் பெற்ற திருவாக் கூருக்கு அந்த நாயனார் எழுந்தருளி அடைந்தார். பாடல் வருமாறு: " சீர்மன்னும் திருக்கடவூர்த் திருமயா னமும்வணங்கி ஏர்மன்னும் இன்னிசைப்பாப் பலபாடி இனிதமர்ந்து கார்மன்னும் கறைக்கண்டர் கழலிணைகள் தொழுதகன்று தேர்மன்னும் மணிவீதித் திருவாக்கூர் சென்றணைந்தார்.' சீர்-சீர்த்தி, மன்னும்-நிலை பெற்று விளங்கும். திருக் கடவூர்த் திருமயானமும்-திருக்கடவூரில் உள்ள திருமயானத் திற்கும் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. வணங்கி-பிரம புரீசரை அந்த நாயனார் பணிந்துவிட்டு. 9ர்-அழகு. மன்னும்-நிலை பெற்றுத் திகழும். இன்-இனிய :ഔ ഖബ பெற்ற. இசைப்பா-இசைப் பாடல்கள்; ஒருமை இன்மை மயக்கம். சங்கீதத்தைப் பெற்ற உருப்படிகள். பலலவற்றை. பாடி-அந்த நாயனார் பாடியருளி. இனிதுஇனிமையோடு, அமர்ந்து-திருக்கடவூரில் தங்கிக் கொண் டிருந்து, கார்-கரிய நிறம், மன்னும்-நிலை பெற்று? பொலியும். கறை-நீலக் கறையைப் பெற்ற, க்:சக்தி, கண்ட -திருக்கழுத்தைப் பெற்றவராகிய பிரமபுரீசருடைய கழல்வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும். இணைகள்-இரண்டு
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/139
Appearance