தி ருநாவுக்கரசு நாயனார் புராணம் 13; இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் பெரிய விடைமேல் வருவார் அவர் எம் பெருமான் அடிகளே.' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடி அயருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு :
- உன்னி வானவர் ஒதிய சிந்தையில்
கன்னல் தேன்கட ஆரின் மயானத்தார் தன்னை நோக்கித் தொழுதெழுவார்க் கெலாம் பின்னை என்னார் பெருமான் அடிகளே.' இந்தத் தலத்தைப் பற்றிக் கொல்லிக் கெளவாணப் :பண்ணில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : - . . . மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலை போல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நr iர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.' - திரு ஆக்கூர் : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம் இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் கயம்புநாதேசுவரர், தான்றோன்றியப்பர் என்பவை.