உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 151 கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை ' செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறிசேர் கின்றார்' என் துய்யும் நெறித்தாண் டகம்மொழிந்தங் கொழியாக் காதல் சிறந்தோங்க." இந்தப் பாடல் குளகம். கைகள்-அந்தத் திருநாவுக்கரசு ஆநாயனார் வீழிநாதருடைய திருக்கோயிலுக்குள் எழுந்: தருளித் தம்முடைய திருக்கரங்களை. குவித்து-தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும் பிட்டு விட்டு. க்சந்தி. கழல்-வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் அந்த விழிநாதரு டைய திருவடிகளை; ஆகுபெயர். போற்றி-வாழ்த்தி வணங்கி விட்டு. க்:சந்தி, கலந்த-தம்முடைய திருவுள்ளத்தில் சேர்ந்திருந்த, அன்பு-பக்தியினால். கரைந்து-தம்முடைய திருவுள்ளம் கரைந்து கரைந்து. உருக-உருக்கத் தை அடைய. மெய்யில்-தம்முடைய திரும்ேனியின் மேல். வழியும்-வழித்து இறங்கும். கண்-தம்முடைய விழிகளிலிருந்து, ஒருமை பன்மை மயக்கம். அருவி-மலையிலிருந்துகுதிக்கும் அருவியைப் போல, விரவ-நீர் வழிந்து தரையில் விழ. ப்:சந்தி. பரவும்-அந்த விழி நாதரைப் புகழ்ந்து பாடியருளும். சொல்-இனிய சுவையைப் பெற்ற சொற்கள் அடங்கிய ஒருமை பன்மை மயக்கம். மாலை-மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை செய்ய சடை யார் தமைச் சேரார் திங்கு நெறி சேர்கின்றார் என்றுசெய்ய சடையார் தமைச் சேரார் தீங்குநெறி சேர்கின்றார். என்று தொடங்கி, உய்யும்-யாவரும் உஜ்ஜீவனத்தை அடையும். நெறி-வழியை உணர்த்தும். - த்:சந்தி. தாண்டகம்-ஒரு திருத்தாண்டகத்தை மொழிந்து-அந்த தாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. அங்கு