152 . பெரிய புராண விளக்கம்-7 அந்தத் திருவிழிமிழலையிலிருந்து. ஒழியா-அகலாத. க்:சந்தி. காதல்-விருப்பம். சிறந்து - தம்முடைய திருவுள்ளத்தில் சிறப்பை அடைந்து. ஓங்க.ஒங்கி எழ. . இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருத்தாண்டகம் ஒன்று. வருமாறு : -. - s " போரானை ஈருரிவைப் போர்வை யானைப் புலியதனே உடையாடை பேற்றி னானைப் பாரானை மதியானைப் பசலா னானைப் பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற நீரானைக் காற்றானைத் தீயா னானை நினையாதார் புரமெரிய நினைந்த் தெய்வத் தேரானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே...' இந்தந் திருப்பதிகத்தில் உள்ள இறுதித் திருத் தாண்டகம் வருமாறு : . ' அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள் இறுத்தானை எழுநரம்பின் இசைகேட் டானை. இந்துவினைத் தேயத்தானை இரவிதன் பல் பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப். பரந்திழியும் புனற்கங்கை பணிபோ லாங்குச் செறித்தானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே." அடுத்து உள்ள 254-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : முன்பு ஒரு காலத்தில் பிரமதேவனும் திருமாலும் அன்னப் பறவையினுடைய வடிவத்தை எடுத்துக் கொண்டு மேலே பறந்து தேடிப் பார்த்தும், பன்றியினுடைய உருவத்தை எடுத்துக் கொண்டு நிலத்தைத் தோண்டித். தேடிப் பார்த்தும் தம்முடைய திருமுடியையும் திருவடி களையும் பார்க்க முடியாத தங்கத்தைப் போன்ற திருமேனி யைப் பெற்ற மாணிக்க மலையைப்போன்றவரை, மலர்கன்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/158
தோற்றம்