உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . - 159 வதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநா வுக்கரசு நாயனாருக்கும் அவர்கள் எழுந்தருளும் ஒவ்வொரு தினத்திலும் பொற்காசுகளை ஆலயத்தின் படிகளில் வீழி: நாதர் வைத்தருள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு திணைகளைப் பெற்ற இந்த நிலவுலகத்தில் வாழும் கணக்கு இல்லாத அடியார்களோடு திருவமுது செய்து கொண்டு அந்தத் திருவிழிமிழலையில் அந்தத் திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார். ஆகிய இரண்டு நாயன்மார்களும் தங்கிக் கொண்டிருந்தார். கள். பாடல் வருமாறு : விண்ணின்றிழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண்டகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத் தருள கானிலத்தில் எண்ணில் அடியா ருடன்அமுது செய்தங் கிருந்தார் இருவர்களும்.' விண்ணின்றிழிந்த விமானத்தின்-திருவிழி மிழலையில் உள்ள திருக்கோயிலில் விளங்கும் விண்ணிழி விமானத்திற்கு. கிழக்கும்-கிழக்குத் திசையிலும். மேற்கும்-மேற்குத் திசை யிலும் இருக்கும். பீடத்தில்-பலிபீடங்களில் ஒருமை பன்மை மயக்கம். அண்ணல்-பெருமையைப் பெற்றவரும். புகலி-புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் புரிந்தருளிய வரும்; ஆகுபெயர். ஆண்-ஆண்மையையும். தகையார் தமக்கும்-தகுதியையும் பெற்றவரும் ஆகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்கும். தம்:அசைநிலை. ஆண்ட-திருவ வதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட அரசி னுக்கும்-திருநாவுக்கரசு நாயனாருக்கும். அரசு:திணை மயக்கம். நண்ணும்-அவர்கள் திருக்கோயிலுக்கு எழுந் தருளும். நாள்கள் தொறும்-வேறு வேறு நாள் ஒவ்வொன்