திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 18] பிறகு வரும் 264-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்திருக்கும் புன்னை மரத்தில் உள்ள மலர்கள் வீசும் நறுமணம் சுற்றியிருக்கும் பூம்பொழிலுக்குப் பக்கத்தில் உள்ள உப்பளத்தினுடைய முற்றம் ஒவ்வொன்றிலும் சிறிய மடப்பத்தைப் பெற்ற பெண்மணிகள் முத்துக்களைக் கொழித்து எடுக்கும் திரு மறைக்காடாகிய வேதாரணியத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் மேரு மலையாகிய வில்லை ஏந்திய வராகிய வேதாரணியேசுவரர் மகிழ்ச்சியை அடைந்து எழுந் தருளியிருந்த திருக்கோயிலுக்குள் நு. ைழ ந் து அந்த . ஆலயத்தை வலமாக வந்து தெற்குத் திசையில் உள்ள புகலி யாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய அரசராகிய - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், திருநாவுக்கரசு நாயனாரும் அந்த வேதாரணியேசுவரருடைய அழகிய சந்நிதிக்கு எழுந்தருளி அந்த இரண்டு நாயன்மார்களும் அடைந்தார்கள். பாடல் வருமாறு: . - ': மன்றல் விரவு மலர்ப்புன்னை மணம்சூழ் சோலை உப்பளத்தின் முன்றில் தோறும் சிறுமடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டுக் குன்ற வில்லி யார்மகிழ்ந்த - கோயில் புகுந்து வலம்கொண்டு சென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவும் அரசும் திருமுன்பு. ’’ மன்றல்-நறுமணம். விரவு-வீசிக் கமழும். மலர்-மலர்சள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. புன்னை-புன்னை மரத்தில் பூத்திருக்கும் மலர்கள்: ஆகு பெயர். மணம்-நது மணத்தை, சூழ்-சுற்றி வீசும். சோலைபூம்பொழிலுக்குப் பக்கத்தில் உள்ள உப்பளத்தின்-உப்புக் களை வாரி எடுக்கும் பாத்தியினுடைய, முன்றில்-முற்றம்:
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/187
தோற்றம்