உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெரிய புராண விளக்கம்-7 முன்றில்-இல்முன்; முன்பின்னாகத் தொச் கதொகை. தோறும்-ஒவ்வொன்றிலும். சிறு-சிறிய, மடவார்-மடப் பத்தைப் பெற்ற உப்பு வாணிகர்களுடைய பெண்மணிகள்: ஒருமை பன்மை மயக்கம். முத்தம்-சிப்பிகள் உழுமிம் முத்துக் களை ஒருமை பன்மை மயக்கம். கொழிக்கும்-சலித்து எடுக்கும். மறைக்காட்டு-திருமறைக் காடாகிய வேதா ரணியத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும்; ஆகுபெயர், க்:சந்தி, குன்ற-பொன்மலையாகிய மேரு பர்வதமாகிய. வில்லியார்-வில்லை ஏந்தியவராகிய வேதா ரணியேசுவரர். மகிழ்ந்த-மகிழ்ச்சியை அடைந்து எழுந் தருளியிருந்த கோயில் - திருக்கோயிலுக்குள். புகுந்துநுழைந்து. வலம்கொண்டு-அந்த ஆலயத்தை வலமாக வந்து. தென்-தமிழ்நாட்டில் தென் திசையில் விளங்கும். புகலி. புகலியாகிய சீகாழியில் திருவவதார்ம் செய்தருளிய. க்:சந்தி3 கோவும்-அரசராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும். அரசும்-திருநாவுக்கரசு நாயனாரும்; திணை மயக்கம். திரு முன்பு-அந்த வேதாரணியேசுவரருடைய அழகிய சந்நிதிக்கு. சென்று-எழுந்தருளி. சேர்ந்தார்-அந்த இரண்டு நாயன் மார்களும் அடைந்தார்கள் : ஒரு மை பன்மை மயக்கம். பிறகு உள்ள 265 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "கடலினுடைய அலைகள் வீசும் உப்பங்கழிகளுக்கும், கடற்கரைச் சோலைக்கும் பக்கத்தில் பல வகையான மரங் கள் நெருங்கி வளர்ந்திருக்கும் அந்தச் சிவத்தலமாகிய வேதாரணியத்தில் பாம்புகளைத் தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் அணிந்திருக்கும் வேதியராகிய வேதாரணியேசுவரரை இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய எல்லா வேதங் களும், அருச்சனையைப் புரிந்து வலிமையைப் பெற்ற அந்த வேதாரணியேசுவரருடைய திருக் கோயிலின் திருவாயிலில் உள்ள திருக்கதவைப் பூட்டிவைத்த அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் அந்தத் திருக்கதவு மூடியே நிற்.