திருநாவுக்கரசு நாயனார் புராணம் 233 கோயில் கொண்டிருப்பவர் கைலாச நாதர். அம்பிகை சபள நாயகி. நந் திணி என்பவள் வழிபட்ட தலம் முழையூர் என்பது. இங்கே கோயில் கொண்டிருப்பவர் பரசு நாதேசு வரர். அம்பிகை ஞானாம்பிகை. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு : மூக்கி னால்முரன்றோதியக் குண்டிகை தூக்கினார்குலம் துாரறுத் தேதனக் காக்கி னானணி யாறை வடதளி நோக்கி னார்க்கில்லை யல் அரு நோய்களே. ' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய மற்றொரு திருக்குறுந் தொகை வருமாறு : - ஒதினத்தெழுத் தஞ்சுண ராச்சமண் வேதி னைப்படுத்தானைவெங் கூற்றுதை பாத னைப்பழை யாறை வடதளி நாத னைத்தொழ நம்வினை நாசமே." பிறகு உள்ள 295-ஆம் கவியின் கருத்து வருமாறு : அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த விமானத் துக்குச் சமீபமாக அங்கே ஒர் இடத்தினுடைய பக்கத்தை அடைந்தருளி நறுமணம் கமழும் வாசனையைப் பெற்ற கொன்றை மாலையை அணிந்திருக்கும் திருமுடியைப் பெற்ற வராகிய சோமேசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங்குபவையும் செந்தாமரை மலர்களைப் போலச் சிவப் பாக உள்ளவையும் ஆகிய அந்தச் சோமேசுவரருடைய திருவடிகளைத் தியானித்து, மந்த புத்தியைப் பெற்றவர் களாகிய சமன்னர்கள் வஞ்சகமான செயலால் சிவலிங்கத்தை மறைத்து வைத்திருந்த லஞ்சனையைப் போக்கியருளிப் பாச பந்தத்தைப் பெற்ற சமணர்களாகிய இழிந்த குணங்களையும் இழிவான செயல்களையும் பெற்றவர்களுடைய வஞ்சக - இயல்பைப் போக்கியருளுவீராக." என வேண்டிக் கொண்டு
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/259
Appearance