உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பெரிய புராண விளக்கம்-7 தலையில் - தங்களுடைய தலைகளில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். மயிரை - மயிர்களை ஒருமை பன்மை ம்யக்கம். ப்: சந்தி. பறித்து-தாங்களே பிடுங்கிக் கொண்டு விட்டு. இதை உலோச்சு’ என்பர். உண்ணும்-நின்று கொண்டே உணவுகளை உண்ணும். சாதி-இழிந்த சாதியா கிய சமணர் சாதியிற் பிறந்த, அமண்ர்-சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மறைத்தாலும்-சிவலிங்கப் பெருமானை - . மறைத்து வைத்திருந்தாலும். நிலை. தமக்கென்று ஒரு நிலை யான வாழ்க்கை நிலையை. இலாதார்-பெறுதல் இல்லாதவர் களாகிய அந்தச் சமணர்கள்; இடைக்குறை; ஒருமை பன்மை மயக்கம். நிலைமையினால்-தங்களுடைய வஞ்சகமான நிலையால். மறைக்க-அந்தச் சிவலிங்கத்தை மறைத்து வைக்க, ஒண்னுமோ-முடியுமோ. என்னும்- என்னும் கருத்தை வைத்துத் தாம் பாடியருளும். விலை இல்-விலை கொடுத்து வாங்குதல் இல்லாத. இல்: கடைக்குறை. வாய்மை-உண்மைகளைக் கூறும்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. குறுந்தொகைகள்-பல திருக்குறுந்தொகைகளை. விளம்பி-அந்தநாயனார் பாடியருளி. ப்: சந்தி. புறம்-திருவிழி மிழலைக்கு வெளியில். போந்து-எழுந்தருளி. அங்கு-அந்தத் திருவிழிமிழலையில். அமர்ந்தே-தங்கிக்கொண்டிருந்தபடியே, இலைகொள்-மூன்று இலைகளைக்கொண்ட ஒருமை பன்மை மயக்கம். சூலப்படையார்-சூலமாகிய ஆயுதத்தை ஏந்திய வராகிய சிவபெருமானார். சேர்-சேர்ந்து எழுந்தருளிய. இடங்க்ள்-சிவத் தலங்கள். பிறவும்-பிறவற்றிற்கும் எழுந் தருள.தொழ-அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை அந்த நாயனார் வணங்குவதற்காக. அனைவார்-அடைவாரானார். இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருக்குறுந் தொகைகள் பழையாறை வடத்ளியைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியவை. அவை வருமாறு: