உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 269 தில் அகிலாண்ட நாயகியினுடைய திருக்கோயிற் பூசகர் அம்பிகையைப் போல வேடம் ஆண்டு கொண்டு இந்தத் திருக்கோயிலுக்கு வந்து அருச்சனை செய்து விட்டுச் செல் கிறார். - - உறையூரில் இரு ந் து ஆட்சி புரிந்த சோழ மன்னன் ஒருவன் பதக்கத்தை அணிந்து கொண்டு காவிரியாற்றில் நீராடிய போது அந்தப் பதக்கம் ஆற்றில் விழுந்துவிட, அந்த மன்னன், சிவ பெருமானே இதை ஏற்றுக் கொண்டருள் வீராக’’ என்று விண்ணப்பிக்க, அந்தப் பதக்கம் திருமஞ்சன நீர் எடுக்கும் ஒரு குடத்தில் அகப்பட்டு ஜம்புகேசுவரருக்கு அபிடேகம் புரிந்த போது அது அந்த ஜம்புகேசுவரரின் மேல் விழ அதனை அந்த சசுவரர் அணிந்து கொண்டு அந்தச் சோழ மன்னனுக்குத் தம்முடைய திருவருளை வழங்கிய தலம் இது. இந்தச் செய்தியைச் சுந்தர மூர்த்தி நாயனார் இந்தத் த லத் ைத ப் பற்றிப் பாடியருளிய ஒரு திருப் பதிகத்தில், " தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுந்து நீரி னின்றடி போற்றி நின்மல கொள்ளென ஆங்கே ஆரம் கொண்ட எம். ஆனைக் காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாமும் எம்மையும் ஆளுடை யாரே." என்று புலப்படுத்தி யிருக்கிறார். t. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிக் கெளசிகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரத்தில் இறைவன் ஆரத்தை ஏற்றுக் கொண்டருளியதைப் பாடி யிருக்கிறார். அந்தப் பாசுரம் வருமாறு: - . . கூரும் மாலை நண்பகற் கூடி வல்ல தொண்டர்கள்