280 பெரிய புராண விளக்கம்-இ செத்த மிழ்த்திறம் வல்லிரோ செங்கண் அரவம் முன்கையில் ஆடவே வந்து நிற்கும் தென்கொ லோபலி மாற்ற மாட்டோம் இடகிலோம் பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்தம் தாறுபைஞ் Dலியீர் அந்தி வானமும் மேனியோ சொலும் ஆரணிய விடங்கரே." பிறகு வரும் 304-ஆம் கவியின் கருத்து வருமாறு: - 'அவ்வாறு திருப்பைஞ் சூரீலிக்கு எழுந்தருளுவதற்காக வழியில் எழுந்தருளும் சமயத்தில் மிகவும் களைப்பை: அடைந்து வருத்தம் உண்டாக தண்ணீர்த் தாகத்தோடும். எல்லா நன்மைகளையும் அழிப்பதை உடையதாகும் பசி, தமக்கு வந்து சேர்ந்தவுடன் அதன் பொருட்டுத் தம்முடைய: திருவுள்ளம் அலைச்சலைப் பெறாமல் சொற்களுக்கு அரச ராகிய திருநாவுக்கரசு நாயனாரும் முன்னால் எழுந்தருளிவர: நறுமணம் நிரம்பிய மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகை: மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழில் சுற்றியுள்ள திருப் பைஞ் ஞiலியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒற்றைக்கண்ணை ஏந்தியுள்ள நெற்றியைப் பெற்றவராகிய நீலகண்டேசுவரர் தம்முடைய திருத்தொண்டராகிய திரு. நாவுக்கரசு நாயனார் பசியினாலும் நீர்வேட்கையினாலும், அடைந்த வருத்தத்திலிருந்து அந்த நாயனாரை மீட்டருள்: வாரா கி. பாடல் வருமாறு: ' * . . . . . " வழிபோம் பொழுது மிகஇளைத்து வருத்தம் உறநீர் வேட்கை யொடும் அழிவாம் பசிவக் தணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே மொழிவேக் தரும்முன் எழுந்தருள முருகார் சோலைப் பைஞ்ஞீலி
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/286
தோற்றம்