உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 282 பெரிய புராண விளக்கம்-7 அடுத்து உள்ள 805-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'நீலகண்டேசுவரர் சோலையையும் ஒரு குளத்தையும் , அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு முன்னால் அமைத்துக் காட்டியருளிவழியில் எழுந்தருளும் கருத்தோடு எழுந்தருளும் எண்ணத்தோடு விபூதியைத் தம்முடைய திருமேனி முழுவ தும்பூசிக்கொண்டு விளங்கும் ஒருவேதியராகிஅந்த நாயனார். விழையும் கட்டுச் சோற்றையும் எடுத்துக் கொண்டு நாவி னால் திருவாய், மலர்ந்தருளும் சொற்களுக்கு ஒப்பற்ற அரச ராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு எதிரில் எழுந் தருளி ஆகாயத்தின் மேல் தாவிப் பறக்கும் அன்னப் பறவை பும், நிலத்தைத் தோண்டிப் பார்க்கும் ஒப்பற்ற பன்றியும் ஆக உருவங்களை எடுத்துக் கொண்டு தம்முடைய திருமுடி யையும் திருவடிகளையும் தேடிப் பார்த்தும் பிரம தேவனும் திருமாலும் பார்ப்பதற்கு அரியவராகிய அந்த நீலகண்டேசு வரர் வீற்றிருந்த எளினார். பாடல் வருமாறு: - " கர்வும் குளமும் முன்சமைத்துக் காட்டி வழியோம் கருத்தினால் மேவும் திருற்ே றந்தனராய் விரும்பும் பொதிசோ றும்கொண்டு காவின் தனிமன் னவர்க்கெதிரே கண்ணி இருந்தார் விண்ணின்மேல் தாவும் புள்ளும் மண் இழிக்கும் தனின னமும்காண் பரியவர்தாம். ' காவும்-நீலகண்டேசுவரர் ஒரு பூஞ்சோலையையும். குணமும்-ஒரு நீர் நிறைந்த குளத்தையும். முன். அந்தத்திரு. தாவுக்கரசு நாயனாருக்கு முன்னால். சமைத்து-அமைத் து வைத்தருளி. க்:சந்தி. காட்டி-காண்பித்தருளி. வழி-அந்த வழியாக, என்றது திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளும் வழியை. போம்-எழுந்தருளும். கருத்தினால்-எண்ணத் தோடு, உருபு மயக்கம். மேவும்-எழுந்தருளும். திருநீற்று.தம்முடைய திருமேனி முழுவதும் விபூதியைப் பூசிக்கொண்டி