294 பெரிய புராண விளக்கம்-7 தங்களுடைய செருக்குத் தீர்ந்து திகைப்பை அடைந்து நின்று கொண்டிருக்கத் தாமே பரம்பொருள் என்று அருணாசலேசு வரர் நிறுவியருளிய தலம் இது. இந்த ஐதிஹ்யத்தைப் புலப்படுத்துவதற்கு இந்தக் காலத்திலும் ஒவ்வோர் ஆண்டி லும் வரும் கார்த்திகை மாதத்துக் கிருத்திகை நட்சத்தி ரத்தில் தீப தரிசனத் திருவிழா இந்தத் தலத்தில் நடை பெற்று வருகிறது. மேலைக் கோபுரத்தைப் பேய்க்கோபுரம் என்று வழங்குவர். இந்த மலையைப் பிரதட்சிணம் செய்ய வேண்டுமானால் எட்டு மைல் தூரம் நடக்க வேண்டும். இடைவழியில் பல தீர்த்தங்களும் அணி அண்ணாமலை என்னும் சிவத்தலமும் குகை நமசிவாயருடைய திருக்கோயி லும் உள்ளன. உண்ணாமுலையம்மையார் தவத்தைப் புரிந்து அருணாசலேசுவரருடைய வாம பாகத்தைப் பெற்று அருளிய தலம் இது. திருப்புகழ்ப் பாக்களைப் பாடியருளிய அருணகிரிநாத சுவாமிகளுடைய திருவவதாரத் தலம் இது. அவர் சமாதி அடைந்த இடம் இந்தத் தலத்தில் ஒரிடத்தில் உள்ளது. அங்கே அவருடைய திருவுருவத்தைச் சிறியதாகச் செய்து வைத்திருக்கிறார்கள், அவருக்குத் தன்னுடைய திருவருளை வழங்கிய முருகக் கடவுளினுடைய திருவுருவம் இந்தத் திருக்கோயிலுக்குக் கிழக்கே ஒரு கம்பத்தில் இருக் கிறது. அவரை, கம்பத்திளையனார்: என வழங்குவர். - இந்தத் தலத்தைப் பற்றி நட்டபாடைப் பண்ணில் திரு ஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன் அருவித் திரள் மழலைம் முழவதிரும்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/300
Appearance