உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரிய புராண விளக்கம்-ா சேலூர்தண் பணைசூழ்ந்த t தென்திருவாஞ் சியம்,அணைந்தார். ' நாலூர்-திருநாலூருக்கும்.தென்-தெற்குத் திசையில்இருக். கும். திருச்சேறை-திருச்சேறைக்கும். குடவாயில்-குடவாயி' லுக்கும். நறையூர்-நறையூருக்கும். சேர். அதைச் சேர்ந். துள்ள. பால் ஊரும்-பாலைப் போல இனிமை சேரும். இன். இனிய சுவையைப் பெற்ற. மொழியாள்-வார்த்தைகளைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவராகிய பெரிய அம்பிகையை. மொழி: ஒருமை பன்மை மயக்கம். பாகனார்-தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்திருப்பவராகிய பலாசவு னேசுவரருடைய, கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடி களை ஆகு பெயர். பரவி. வாழ்த்தி வணங்கி மேல்-தமக்கு, மேலே. ஊர்தி-வாகனமாக. விடை-இடபத்தையும். க்:சந்தி, கொடியார்-துவசமாக அந்த இடபத்தையும் கொண்ட சில: பெருமானார். மேவும்-விரும்பி எழுந்தருளியிருக்கும், قاسي - தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம், பல-பலவற்றிற்கும். அந்த நாயனார் எழுந்தருளி. பாடி-அந்தத் தலங்களில் திருக், கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களைப் பாடியருளி. ச்:சந்தி. சேல்-சேல் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஊர்-தவழ்ந்து குதிக்கும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற, பணை-வயல்கள்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்தசுற்றியுள்ள. தென்-தெற்குத் திசையில் விளங்கும். திருவாஞ் சியம்-திருவாஞ்சியத்தை. அணைந்தார்-அந்த நாயனார் அடைந்தார். . . . . . திருநாலூர்: இது சோழ நாட்டில், நாலூர் மயானம் என வழங்கும் சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பலா சவனேசுவரர். அம்பிகை பெரிய அம்பிகை. இது திருக்குட வாசலுக்கு வடகிழக்குத் திசையில் மூன்று மைல் தூரத்தில் உள்ளது. ஆபஸ்தம்ப முனிவர் பூசித்த தலம் இது.திருநாலூர் மயானத்திற்குத் தென் மேற்குத் திசையில் ஒரு மைல்