உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - பெரிய புராண விளக்கம்-7 மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள் திருவ னார்பணிந் தேத்தும் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஒருவ னார் அடி யாரை ஊழ்வினை நலியஒட் டாரே. ” பிறகு உள்ள 17-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: பெருகி வீசும் நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்திருக் கும் பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழி லைப் பெற்ற பெருவேளுருக்குத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளிப் பிரியா ஈசுவரரை வணங்கித் துதித்து விட்டு நறுமணம் நிறைந்திருக்கும் கொன்றை மலர் மாலையை அணிந்தருளும் முதல்வராகிய சிவபெருமானார் எழுந்தருளி யிருக்கும் தலங்கள் பிறவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்: தருளி அழகு நிரம்பியிருக்கும் திருவிளமருக்கு உடனே எழுந்தருளிப் பதஞ்சலி மனோகரேசுவரரை வணங்கிவிட்டு: வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் பகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுடைய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங் கள்ை எரித்தவராகிய தியாகராஜப் பெருமானார் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக் கும் திருவாரூருக்கு அந்த நாயனார் எழுந்தருளிச் சேர்ந்தார். பாடல் வருமாறு : 'பெருவாச மலர்ச்சோலைப் பெருவேளுர் பணிந்தேத்தி முருகாரும் மலர்க்கொன்றை முதல்வனார் பதிபிறவும் திருவாரும் விளமருடன் சென்றிறைஞ்சி வாகீசர் மருவார்ஊர் எரித்தவர்தம் திருவாரூர் வந்தடைந்தார். ”