திருநாவுக்கரசு நாயனார் புராணம் 89. கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பிறவும்-மற்றவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி. பணிந்து-அந்தத் தலங்களில் எழுந்தருளியிருக் கும் சிவபெருமானார்களை வணங்கிவிட்டு. போந்தார். மீண்டும் திருவாரூருக்கே எழுந்தருளினார். . திருப்புகலூர்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் அக்கினிசுவரர், கோணப்பிரான் என்பவை. அம்பிகை கருந் அக்குசிலி அம்மை. தீர்த்தம் அக்கினி திர்த்தம். தலவிருட்சம் கொன்றைமரம். இது நன்னிலத்திலிருந்து கிழக்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இது அக்கினி தேவன் வழிபட்ட தலம். தெற்குப் பக்கத்தைத் தவிர மற்ற எல்லாப் பக்கங்களிலும் கருங்கல்லினால் கட்டப் பெ ற்ற அகழி உள்ளது. கோணப்பிரானுடைய திருவுருவம் சற்றுச் காப்த்திருக்கிறது. இந்த ஆலயத்தில் சந்திரசேகரர் சந்நிதி சிறப்புடையது. அந்தச் சந்நிதிக்கு நேரில் அக்கினி பகவா னுடைய திருவுருவம் இருக்கிறது. திருநாவுக்கரசு நாயனார் முத்தியை அடைந்த தலம் இது. இந்த ஆலயத்தில் எழுந் அருளியிருக்கும் வாதாபி கணபதியினுடைய திருவுருவத்திற்கு அருகில் திருநாவுக்கரசு நாயனாருடைய திருவுருவம் உள்ளது. முன்புள்ள பிராகாரத்தில் கிழக்குப்பக்கத்தில் கோணப்பிரான் சிங்க உருவமாய் திருநாவுக்கரசு நாயனாரை விழுங்கும். காட்சி கல்லிற் காட்டப் பெற்றிருந்தது. இப்போது அதைச் செதுக்கிவிட்டார்கள். திருடபுகலூர் வர்த்தமானிச் சுரம் இந்தத் திருக்கோயிலுக்குள் இருக்கிறது. அக்கினிசுவ ரருக்குப் பல வகையாகிய மலர் மாலைகளைக் கட்டி. வழங்கும் திருத்தொண்டினைப் புரிந்து வந்த முருக நாயனா' ருடைய திருவவதாரத் தலம் இது. சுந்தரமூர்த்தி நாயனார் பள்ளி கொண்டு உறங்கிய போது அவர் தம்முடைய தலைக்கு அணையாக வைத்துக் கொண்டிருந்த செங்கற்.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/95
தோற்றம்