பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வரலாற்றுச் சிறப்பு மிகு மாதம்

முஹர்ரம் பத்தாம் நாள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மட்டுமல்லாது வரலாற்று நிகழ்ச்சிகளின் அடிப்படையிலும் சிறப்புமிகு நாளாகக் கருதப்படுகிறது.

முன்பொரு சமயம் எகிப்து நாட்டை ஆண்டுவந்த ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னன் தன்னை கடவுள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டான். எல்லோரும் தன்னையே வணங்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தினான். மறுத்தவர்களை கொடுமைப்படுத்தினான். ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான்.

‘இறைவனால் படைக்கப்பட்ட எதுவுமே வணங்குவதற்குரியதல்ல; மூலப் படைப்பாளனாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்’ என மக்களிடையே போதனை செய்து வந்த ‘மோசஸ்’ எனும் மூசா நபி கொடுங்கோலனின் கொடுமைகளிலிருந்து விடுபட எகிப்தைவிட்டு வெளியேறியபோது செங்கடல் பிளந்து வழிவிட்டது. அப்பிளவினூடே ஃபிர்அவ்ன் விரட்டிச் சென்றான். மூசா நபியும் அவரைப் பின்பற்றியோரும் கரை சேரவே பிளந்து நின்ற செங்கடல் இணைந்தது. கடலிடையே அகப்பட்ட ஃபிர் அவ்னும் அவன் படையினரும் கடலுள் மூழ்கி அழிந்தனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றது முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

இந்நாளை மூசா நபி வழிவந்த யூதர்களும் முஸ்லிம்களும் ஆஷூரா தினமாகக் கடைப்பிடித்து நோன்பு நோற்று வருகிறார்கள். ரமளான் நோன்புக்கு அடுத்தபடி யாகச் சிறப்புமிகு நோன்பாக ‘ஆஷூரா’ நோன்பு கருதப்படுகிறது. பத்தாம் நாள் எனப் பொருள்படும் வகையில் ‘யவ்முல் ஆஷூரா’ என அழைக்கப்படினும் பத்தாம் நாளன்றே இறைவனின் திருவுளப்படி பத்து நிகழ்வுகள்