பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

நடைபெற்றதால் ‘ஆஷூரா’ நாள் என்றே அழைக்கப்படலாயிற்று என்பர்.

‘நோவா’ என அழைக்கப்படும் நூஹ் நபி அவர்கள் ஊழிக்கால மழையிலிருந்து உயிரினங்களைக் காக்க அவற்றைக் கப்பலில் ஏற்றி, பன்னெடுங்காலம் கடலில் சுற்றிச் சுழன்று இறுதியில் கரையிறங்கிய நாள் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

டேவிட் எனப்படும் தாவூது நபிக்கு இறை மன்னிப்புக் கிடைத்ததும், ‘ஒரே இறைவன்’ என்ற ஒப்பற்ற இறைத் தத்துவத்தை உலகுக்குப் போதித்த ‘ஏப்ரஹாம்’ எனும் இபுராஹீம் நபிக்கு ‘கலீல்’ (இறைத்தோழர்) எனும் உன்னதப் பட்டத்தை இறைவன் வழங்கியதும் ‘ஜீசஸ்’ எனும் ஈசா நபி அவர்களை இறைவன் விண்ணகத்திற்கு அழைத்துக் கொண்டதும் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான்.

இவையனைத்தும் நபிகள் நாயகத்திற்கு முன்னதாக நடைபெற்ற இறையருள் நிகழ்வுகளாகும்.

பெருமானாரின் பெருவாழ்வுக்குப் பின்னர், அவர்தம் பேரர் இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தோழர்களும் கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான் கொல்லப்பட்டார்கள். இஸ்லாமிய சமுதாய நலனைக் காக்கவும் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநிறுத்தவும் இத் தியாகத்தை இமாம் ஹூஸைன் (ரலி) செய்தார்கள். ஆனால், இத் தியாக நிகழ்ச்சியின் காரணமாக முஹர்ரம் பத்தாம் நாளின் சிறப்பு கூடவோ குறையவோ இல்லை. காரணம், இறுதி இறைத்தூதர் அண்ணல் நபிகள் நாயகத்திற்குப் பின்னர் நிகழ்ந்த எந்த நிகழ்ச்சியும் புனிதமானவை எனப் போற்றப்படவோ முக்கியத்துவமுடையவையாகக்