பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கருதப்படவோ இஸ்லாத்தில் இடமில்லை. ஆயினும் உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட இறைவழியில் ஒழுகும்போது எத்தகைய போரிடர் வரினும் உயிரையே இழக்க நேரினும் சிறிதும் பின் வாங்காது தியாகம் புரிய வேண்டும் என்பதை நினைவூட்டும் நிகழ்வாக கர்பலா பெருவெளி நிகழ்ச்சி அமைந்து ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உத்வேகமூட்டி வருகிறது.

முஹர்ரம் நாளன்று நோன்பு நோற்று இரவு முழுவதும் கண்விழித்து இறை வணக்கம் புரிவோரின் பாவம் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்படுகிறது என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

‘ஆஷூரா அன்று நோன்பு நோற்பதோடு அதற்கு முன்பும் பின்பும் உள்ள இரு நாட்களையும் சேர்த்து நோன்பிருப்பது ஓராண்டு நோன்புக்கு இணையாகும்’ எனவும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

முஹர்ரம் மாத முதல் நாள் நோன்பு பத்தாம் நாளின் போது கடைப்பிடிக்கப்படும் ஆஷூரா நோன்புகளை நோற்பதோடு ஏழை எளியவர்க்கு இயன்ற உதவிகள் அனைத்தும் செய்ய வேண்டும். தரும சிந்தனையாளர்களாக மாற வேண்டும். அநாதைகளை அரவணைத்து வாழ்வு தர வழி செய்ய வேண்டும். அவர்களின் துன்பம் நீக்கி இன்புறு வாழ்வுக்குத் துணைபோதல் வேண்டும். அமைதி மாதமாக அமைந்திருப்பதால் வேற்றுமை உணர்வுகளை முற்றாகக் களைந்திடல் வேண்டும். ஒருங்கிணைவான உணர்வுகளை ஊட்டும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். மார்க்க ஞானம் மிக்க பெரியார்களைத் தேடிச் சென்று காண வேண்டும். தன் குடும்பத்துக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களின் குடும்பத்துக்காகவும் தாராளமாகச் செலவு செய்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். இந்நாட்