பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

பெரும்பாலும் பட்டினி இருப்பதே அவர்கட்கு மிகவும் பிடிக்கும். பசி தெரியாமலிருக்க வேட்டியை வயிற்றில் இறுகக் கட்டிக் கொள்வது அவர் வழக்கம்.

பெரும் மரியாதை

எளிமையின் உருவாய் வாழ்ந்த பெருமானார் இளையோர் முதல் முதியோர் வரை அனைவரிடத்தும் பெரும் மரியாதை காட்டுவதில் தன்னிகரற்று விளங்கினார். இளையவர்களோ பெரியவர்களோ யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவர்கட்கு சலாம் (முகமன்) கூறுவதில் எப்போதுமே முந்திக் கொள்வார். ‘சலாம் சொல்லுவதில் யார் முந்திக் கொள்கிறாரோ அவருக்கு அதிக நன்மையும் இறையருளும் கிட்டுகிறது’ என்பது நாயக வாக்காகும்.

முதியவர்கட்குத் துணையாயிருப்பதிலும் ஆறுதலாக நடந்து கொள்வதிலும் பெரு விருப்பமுடையவராகத் திகழ்ந்தார். ஒரு சமயம் நாயகத்திருமேனி தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியிலிருந்து வெளிவந்தார்கள். வரும் வழியில் மூதாட்டியொருவர் பெருமானாரை அழைத்துத் தன் குறைகளையெல்லாம் கொட்டினாள். அம் மூதாட்டியின் சொற்களைப் பொறுமையாக செவிமடுத்த நபிகள் திலகமும் அம் மூதாட்டி மனங்கொள்ளுமாறு தீர்வுகளும் சமாதான கூறித் தேற்றினார். அப்போது பெருமானாரைக் காண அங்கு வந்த ஏமன் நாட்டு மன்னர் இதைக் கண்டு பெருமானாரின் அடக்கத்தையும் எளிமையையும் மனித நேயத்தை வியந்ததாக வரலாறு கூறுகிறது.

தான் ஆடம்பரமற்ற எளிய வாழ்வு வாழும் அதே சமயத்தில் மற்றவர்களையும் உரிமையோடும் சிக்கனத்தோடும் வாழத் தூண்டியவர் பெருமானார்.

சிக்கனம்

ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் மக்காவை வெற்றி